ரஜினி படத்தின் பெயர் கபாலி! அதே தலைப்பில் வேறொரு படம்? நம்ம ஃபீல்டுக்கு என்னதான் ஆச்சு?

வட சென்னை பகுதிகளில் தெருவுக்கு ரெண்டு கபாலியாவது இருப்பார்கள். இனி மேற்படி கபாலிகளுக்கெல்லாம் நல்ல நேரம்தான்! ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் கபாலி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே தலைப்பு இதுவா? அதுவா? என்று தனக்கு தெரிந்த பெயர்களையெல்லாம் போட்டு எடுத்து புரட்டிக் கொண்டிருந்த மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் இனி அந்த அவஸ்தையில்லை.

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் டைரக்டர் பா.ரஞ்சித். இதில் ரஜினி தாதாவாக நடிக்கிறாராம். வடசென்னையில் வாழ்ந்த ஒருவரின் கதையைதான் பா.ரஞ்சித் படமாக எடுப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதுவரைக்கும் தமிழ்சினிமாவில் கபாலி என்ற பெயரை சுமார் காமெடியன்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். லூஸ் மோகன் பல படங்களில் தனது பெயரை கபாலி என்றே வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த அசிங்கத்தையெல்லாம் கம்பீரமாக வந்து துடைத்தெடுப்பார் ரஜினி. இந்த படத்தின் ஷுட்டிங் முழுக்க முழுக்க மலேசியாவில் நடைபெற இருக்கிறதாம். சென்னையில் எடுக்கப்பட வேண்டிய போர்ஷன்களை கூட, மலேசியாவில் வைத்தே மேட்ச் பண்ணிவிடலாம் என்கிற அளவுக்கு திட்டவட்டமாக முன் தயாரிப்பு பணிகளை முடித்திருக்கிறார் டைரக்டர் ரஞ்சித்.

கபாலியில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் அட்டக்கத்தி தினேஷ், தலைவர் படத்தை முடிச்சுட்டுதான் மற்ற வேலை…. அதுவரைக்கும் கால்ஷீட் கேட்டு யாரும் என் வீட்டு கதவை தட்டாதீர்கள் என்கிற அளவுக்கு ஸ்ரிக்ட் ஆகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக தன்ஷிகா நடிக்கக்கூடும். எப்படியோ? இன்னும் கொஞ்ச நாளைக்கு மலேசியாவிலிருந்து வந்திறங்கும் பிளைட்டுகளில் குருவிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் பலர், சுட சுட கபாலி செய்திக்காகவும் காத்திருக்க நேரிடலாம்!

இது ஒருபுறமிருக்க, ஏற்கனவே கபாலி என்றொரு படம் தமிழில் தயாராகி வருகிறது. புதுமுகங்கள் நடிக்கும் அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் நடந்து முடிந்துவிட்டது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் சிவகுமார், விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்று கொண்டிருக்கிறார். அவரை எப்படிதான் சமாதானப்படுத்தப் போகிறார்களோ?

Read previous post:
ரஜினிக்கு ஆகாத சாமி சென்ட்டிமென்ட்! அதற்கப்புறமும் ஏன் ரஞ்சித்?

சாமியார்ட்ட சகவாசம் வச்சுகிட்டா ருத்திராட்ச கொட்டைதான் மிச்சம்! இந்த புதுமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ? சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வ பொருத்தமாகவே இருக்கிறது. காரணம்? அவர் நடித்து...

Close