போலீசுக்கு போவலாம்னு இருக்கேன்! மனம் வெதும்பிய ரஜினி?
எவ்வளவு பெரிய சிங்கமாக இருந்தாலும், கொசு கடிக்க ஆரம்பித்தால் வலை தேடி ஓட வேண்டியதுதான்! ரஜினி என்கிற சிங்கத்தை செமத்தியாக டிஸ்ட்ரப் பண்ணிக் கொண்டிருக்கிறது சிங்காரவேலன் அண் கோ! இந்த கொசுக்கடிக்கு ஒரேயடியாக மருந்தடிப்பதா? அல்லது கொசுவுக்கு ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுப்பதா? பெரும் குழப்பத்திலிருந்த ரஜினி, கடந்த சில நாட்களாக அந்த குழப்பத்திலிருந்து வெளியே வந்துவிட்டதாக தகவல். ‘நோ ஃபிரண்ட் ரிக்வெஸ்ட். ஒன்லி ஆக்ஷன்’ என்ற முடிவுக்கு அவர் வந்திருப்பதாக தெரிகிறது.
ஒரு சின்ன பிளாஷ்பேக். சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்… திமுக ஆட்சி அது. ‘தமிழ்சினிமாவே நாங்கதாண்டா’ என்று காலரை தூக்கிக் கொண்டு நடந்தார்கள் இருவர். தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்சினிமாவில் ஒரு குறுநில மன்னர்களாகவே திகழ்ந்தார்கள். அவர்களின் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கி கண்ணீர் வடிக்காத சினிமாக்காரர்களே இல்லை என்கிற அளவுக்கு போனது அராஜகம். அந்த நேரத்தில்தான் ரஜினி மகள் வாங்கிய கடன் தொகையை வசூலிக்கிற விஷயத்தில் தலையை நுழைத்தார்கள் இருவரும். அவரது அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அநாகரீகமாக பேசியதாகவெல்லாம் அப்போது திரையுலகத்தில் கிசுகிசுக்கப்பட்டது. மகள் அலுவலகத்தில் இப்படியெல்லாம் பிரச்சனை என்று தெரிந்தும், செய்வதறியாமல் அமைதிகாத்தார் ரஜினி என்றும் பேசிக் கொண்டார்கள்.
ஆட்சி மாறியது. அம்மாவை சந்திக்க சென்றார் லதா ரஜினிகாந்த். பூங்கொத்து வழங்கிவிட்டு சில நிமிஷங்கள் தனிமையில் பேசிவிட்டு திரும்பினார். அதற்கப்புறம் இரண்டு வாரங்களுக்குள் அந்த ஆக்ஷன் படலம் நடந்தது. இருவரையும் கொத்தாக அள்ளிக் கொண்டு போனது போலீஸ். சில பல நாட்கள் ஜெயில் வாசம். அவ்வப்போது காவல் துறை கஸ்டடியில் எடுத்து விசாரணை என்று போனது நாட்கள். அதற்கப்புறம் அவ்விருவரும் நீதிமன்றத்திற்கு வருகிறபோது அங்கிருந்த சேனல் கேமிராக்கள் முன் கேவி கேவி அழுததை யாரும் மறந்துவிட முடியாது. ‘போலீஸ் அடிக்குது. எங்களால் அடி தாங்க முடியல…’ என்று அவர்கள் புலம்பியதை தொடர்ந்து ஒளிபரப்பி வந்தன சேனல்கள்.
இதோ- அப்படியொரு ஆக்ஷன் படலத்தைதான் மறுபடியும் ஜனங்கள் பார்ப்பார்கள் போலிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தனக்கு நெருக்கமான ஒரு பிரமுகரிடம் பேசிக் கொண்டிருந்த ரஜினி, ‘பணம் கேட்டாங்க. கொடுத்தாச்சு. அதற்கப்புறமும் மன உளைச்சல் ஏற்படுத்திகிட்டேயிருக்காங்க. பேசாம போலீசுக்கு போயிடலாம்னு இருக்கேன்’ என்று கூறினாராம். பதறிப்போன அந்த பிரமுகர், ‘அண்ணே… வேணாம். உங்க புகழுக்கும் பெருமைக்கும் அப்படியெல்லாம் போய் போலீஸ் ஸ்டேஷன்ல நிற்க கூடாது. எல்லாம் சரியாகிடும். நாங்களே பார்த்துக்குறோம்’ என்றாராம்.
அவரது வார்த்தைகளுக்கு பிறகு தற்போது அமைதியாகியிருக்கிறாராம் ரஜினி. கொசுவின் தொடர் ரீங்காரத்தை பொறுத்துதான் இருக்கிறது ரஜினியின் அடுத்தடுத்த மூவ்கள்!
தலைவா!!! நீங்கள் ஒன்றும் கவலை பட வேண்டாம். உங்கள் மனதை நோகடித்தவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள். நாசமாகத்தான் போவார்கள். உங்கள் பக்கம் சத்தியத்தின் பக்கம் அந்த ஆண்டவனும் உண்மையான ரசிகர்களும் தமிழ் மக்களும் உள்ளனர். கவலை வேண்டாம். மேலே உள்ள ஆண்டவன் பார்த்துகொண்டு தான் இருக்கிறான். கெட்டவர்களை நிச்சயம் அழிப்பான்.