உதவிய ரஜினி ஐ டென்ஷன் ஓவர்! எல்லாரும் ஹேப்பி அண்ணாச்சி
ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது ஐ! ‘வரும் ஆனா வராது…’ ரேஞ்சிலேயே இழுத்துக் கொண்டிருந்த ஷங்கரின் ஐ திரைப்படம் உலகம் முழுவதுமான விநியோகத்தில் 250 கோடி ரூபாயை எட்டியிருக்கிறதாம். தமிழ்சினிமா பட வியாபாரத்தில் இது உச்சம் என்கிறார்கள். இந்த வியாபாரத்தில் ரஜினியின் பங்கு மிக மிக முக்கியமானது என்கிற தகவல்கள்தான் ஆச்சர்யம் நம்பர் ஒன்.
விக்ரம், ஷங்கர் இணையும் படத்தில் ரஜினிக்கென்ன வேலை? அதுவும் பல்லாண்டுகளாக ரஜினியின் கால்ஷீட் வாங்கிவிட துடித்து அதில் தொடர் தோல்வி கண்டு வரும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ரஜினி ஏன் உதவ வேண்டும்? இப்படியெல்லாம் கேள்விகள் எழுகிறது அல்லவா? அதற்கான விடை கீழே.
சிவாஜி எந்திரன் சமயத்திலிருந்தே ஷங்கரை தன் குட் புக்கில் வைத்திருக்கிறார் ரஜினி. அவரே வந்து ‘ஐ படத்தின் ஆந்திரா ரிலீசுக்கு உதவணும்’ என்றால் அவரால் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன? உடனடியாக தனக்கு நெருங்கிய விநியோகஸ்தர் ஒருவரிடம் பேசி படத்தை ஆந்திராவில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்தாராம். இதையும் சேர்த்து கடந்த சில வாரங்களாகவே இழுத்துக் கொண்டிருந்த வெவ்வேறு ஏரியா வியாபார பண பரிவர்த்தனைகள் முடிவுக்கு வர , ஆஸ்கர் ரவி ஹேப்பி அண்ணாச்சியாகியிருக்கிறார்.
பொங்கலுக்கு ரிலீஸ் என்று நாள் குறித்தார்கள் அல்லவா? இப்போது அதற்கும் நான்கு நாட்களுக்கு முன் திரைக்கு வரவிருக்கிறது ஐ. அதாவது 9 ந் தேதி படம் ரிலீஸ். ஹை…!