வெள்ள நிவாரணம்! ரஜினி 10 லட்சம் நிதி
தத்தளிக்கும் சென்னையில் தவியாய் தவிக்கிறார்கள் மக்கள். இந்த மழை பேரழிவுக்கு அடையாளமாக சென்னையை அச்சுறுத்திக் கொண்டிருக்க, வீடு, உடமைகளை இழந்து நடு ரோட்டுக்கு வந்துவிட்டார்கள் மக்கள். இந்த நிலையில் வெள்ள நிவாரண நிதியாக நடிகர்கள் என்ன கொடுத்தார்கள் என்ற கேள்வி சமூக வலைதளங்களிலும், மக்கள் மனங்களிலும் எழ, இனியும் பொறுத்தல் ஆகாது என்று தத்தமது பங்குக்கு நிதியளித்து வருகிறார்கள் திரையுலகத்தை சேர்ந்தவர்கள்.
சூர்யா, கார்த்தி, சிவகுமார் உள்ளிட்ட குடும்பம் சார்பாக 25 லட்சமும், விஷால் பத்து லட்சமும், தனுஷ் 5 லட்சமும், சிவகார்த்திகேயன் 5 லட்சமும் சத்யராஜ் சிபிராஜ் உள்ளிட்டோர் 3 லட்சம் நிதி வழங்கிய நிலையில் ரஜினி தன் சார்பாக 10 லட்சம் வழங்கியிருக்கிறார். ரஜினி வாங்கும் பல கோடி சம்பளத்தோடு இதை ஒப்பிட்டால் இது சின்னஞ்சிறு தொகைதான் என்றாலும் காலத்தினார் செய்த உதவியாச்சே?
அதனால் வரவேற்போம்.