ரஜினிக்கே அனுமதியில்லையா? ங்கொய்யால… யாருகிட்ட வந்து?
லிங்கா படப்பிடிப்பு மைசூர் மாநிலத்தில் நடந்து வருவதை கூடி கூடி வேடிக்கை பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள். இருந்தாலும் ரஜினிக்கு பாதுகாப்பு வேண்டுமே? 100 க்கும் மேற்பட்ட போலீசார் திரண்டு நின்று பாதுகாப்பு கொடுத்து வர, கன ஜோராக வளர்ந்து வருகிறது லிங்கா. ஒரு பாடல் காட்சிக்கு மைசூர் அரண்மனை வேண்டும் என்று ரஜினி தரப்பிலிருந்து கேட்கப்பட, யாராக இருந்தாலும் நோ பர்மிஷன் என்று கூறிவிட்டதாம் நிர்வாகம்.
இப்படியொரு தகவல் ஊரெல்லாம் உலாவர, எல்லா தகவலையும் பொய்யாக்கிவிட்டு ஜம்மென்று நினைத்த இடத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் ரஜினி. யெஸ்… ரஜினிக்காக ஸ்பெஷல் பர்மிஷன் வழங்கினார்களாம் அரண்மனைக்குள். அதுவும் மைசூர் மஹாராஜா பயன்படுத்தி வந்த தங்கத்தால் செய்யப்பட்ட அறை ஒன்றில் பாடல் காட்சியை எடுத்தார்களாம். பொதுவாக இந்த அறைக்குள் யாரையும் அனுமதிப்பதில்லையாம் நிர்வாகம்.
ரஜினிக்காக தனது பிடிவாதத்தை தளர்த்தியிருக்கிறார்கள். முதலும் கடைசியுமாக இந்த தங்க அறையில் படப்பிடிப்பு நடத்தியவர் ரஜினி மட்டுமே என்கிறது கூடுதல் தகவல். இதற்கப்புறம் யாராவது வந்து ஷுட்டிங் நடத்த அனுமதி கேட்டால், திட்டவட்டமாக மறுத்துவிடுங்கள் என்று அரண்மனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
RAJINIYA KOKKA
God Rajini Vazga.