மலேசிய அரசியலும் ரஜினியை விடாது போலிருக்கே?

திறந்த வேனில் ஊர்வலம் போவதும், தினந்தோறும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதுமாக மலேசியாவை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் ரஜினி. “மலேசியா தமிழன் கொடுத்து வச்சவன். நமக்குதான் அதெல்லாம் கொடுத்து வைக்கல…” என்று உள்ளூர் ரசிகர்களின் ஓரவஞ்சனை அழுகையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்… ரஜினியின் வரவை வைத்து வேறு பல திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகிறதாம் அங்கே. அதுதான் ஆச்சர்யம்.

பொதுவாக தமிழ்நாட்டில் ரஜினியின் ஜலதோஷத் தும்மலுக்கு கூட ஒரு அர்த்தம் கற்பிக்கப்படும். அந்த கட்டுப்பாடுகள் எதுவுமில்லாத சந்தோஷத்தில்தான் அவர் ரசிகர்களை பார்த்து வருகிறார். அதுவே அவர் இங்கே திறந்த ஜீப்பில் ஊர்வலமாக சென்று சாலையோரத்தில் நிற்கும் ரசிகர்களுக்கு டாடா காண்பித்திருந்தால், மேற்படி வேனின் டயரை வார்த்தைகளாலேயே தேய்த்து எடுத்திருப்பார்கள் இங்கேயிருக்கும் பாணபத்ர ஓணான்டிகள்.

அது ஒருபுறமிருக்கட்டும்… மலேசியாவில் ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கை உன்னிப்பாக நோக்கி வருகிறதாம் அங்குள்ள அரசியல்வாதிகளின் கண்கள். ரஜினி மீது தமிழர்கள் வைத்திருக்கும் பிரியத்தை அப்படியே ஓட்டாக மாற்ற முடியுமா என்று திட்டமிடுகிறார்களாம். மலேசியாவில் தமிழர்களின் ஓட்டு கணிசமானது, முக்கியமானது என்பதால்தான் இப்படியொரு யோசனை. இன்னும் சில மாதங்களில் அங்கு தேர்தல் வர இருப்பதால், இப்போதைய பிரதமருடன் ரஜினியை சந்திக்க வைக்கிற முயற்சி ஒன்று சைலன்ட்டாக போய் கொண்டிருக்கிறதாம்.

இருவரும் ஒன்றாக அமர்ந்து விருந்துண்ணும் ஒரு ஸ்டில் வந்தால் போதும். மொத்த தமிழர்களின் ஓட்டும் உங்களுக்குதான் என்று பிரதமருக்கு சொல்லப்படுவதாகவும் ஒரு தகவல். மலேசியாவை விட்டு ரஜினி கிளம்புவதற்குள் இதெல்லாம் நடக்கும் என்பதுதான் இப்போதைய கன்குளூஷன்!

5 Comments
  1. Ravi Prasath says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். தமிழ் தெரியாத பல நாடுகளில் தலைவர் ரஜினி அவர்களுக்கு ரசிகர்கள் உள்ளனர்.. இது அந்த ஆண்டவன் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு அளித்த கருணை.

  2. jk says

    HA HA HA………………Nalla Kathai…

  3. jk says

    america la next year election…so enga pona Obamaku support irukum…. HA Ha Ha…pongada poi pulla kuttia padika vai.

  4. jk says

    Japan, Aussie, German , Antarctica angum unga thalivara anuppunga….

  5. jk says

    ‘என் ஒரு துளி வியர்வைக்கு… ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ் அல்லவா..’ என்று பாடி புல்லரிக்க வைத்தவர். இந்த வெள்ள பாதிப்புக்கு எந்த நிவாரண அறிவிப்பும் அவரிடம் இருந்து வரவில்லை.

    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/no-more-political-protests-agitations-from-nadigar-sangam-tn-240389.html#slide175900

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Making video of Movie EETTI

Close