பலாப்பழத்தை புழிஞ்சா முள்ளுதான் மிச்சம்!

பலாப்பழத்தை புழிஞ்சா முள்ளுதான் மிச்சம் என்கிற நிலைமைக்கு கொண்டு வந்துவிடுவார்கள் போலிருக்கிறது ரஜினியை! 37 கோடி லாஸ்… ரஜினிதான் திருப்பிக் கொடுக்கணும் என்று கிளம்பிய விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் ஒருவழியாக சமாளித்து பனிரெண்டரை கோடியில் புல்ஸ்டாப் வைத்தார் ரஜினி. கோபுரம் சும்மாயிருந்தாலும் குருவிங்க சும்மாயிருக்குமா? இந்தா வச்சுக்கோ என்று அதன் தலையிலேயே எச்சமிட்டு தொலைக்கின்றன. கொடுத்த பணத்தை நியாயமாக பிரித்துக் கொடுத்திருந்தால், அவரவர் வேலையை அவரவர் பார்க்கப் போயிருப்பார்கள். ஐந்தரை கோடி ரூபாயை மட்டும் கொடுத்துவிட்டு பஞ்சாயத்தார் எஸ்கேப் ஆகிவிட, மீண்டும் ரஜினியின் புகழை பிடித்து தொங்க ஆரம்பித்துவிட்டது பாதிக்கப் பட்டோர் கோஷ்டி.

‘ரஜினிக்கு 65 கோடி ரூபாய் கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை அடைப்பதற்காகதான் அவர் மீண்டும் மீண்டும் நடிக்கும் எண்ணத்திற்கே வந்திருக்கிறார். இல்லையென்றால் என்றைக்கோ நிம்மதியாக மலைக்கு கிளம்பியிருப்பார் ’ என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இந்த நேரத்தில்தான் அவரை இப்படி நெருக்குகிறது சூழ்நிலை.

நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிங்காரவேலன் தலைமையிலான விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சிலர், ‘எங்களுக்கு இன்னும் பணம் வந்து சேரல’ என்று புலம்பினார்கள். ‘தர்றதா சொன்ன பணத்தை எங்களுக்கு கொடுத்துட்டாங்க. இன்னும் பாதி பேருக்கு வரலே’ என்றார் சிங்காரவேலன். இருந்தாலும், ‘37 கோடி நஷ்டத்தை சரிகட்டணும்னா ரஜினியே வேந்தர் மூவிசுக்கு கால்ஷீட் கொடுத்து, அதில் எங்களையும் பங்குதாரரா சேர்த்தால்தான் முடியும். இந்த ஐடியாவை கொடுத்ததே ரஜினிதான்’ என்கிறார் அவர். எழுத்துபூர்வமான உத்தரவாதம் இல்லை. நேரடியாக ரஜினி சொல்லவும் இல்லை. நான் அப்படி சொல்லவேயில்லைன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க? பிரஸ் கேட்ட கேள்விக்கு பரிதாபமாக பதில் சொன்னார் சிங்காரவேலன்.

‘இன்னும் ஒரு வாரத்தில் திரையரங்க உரிமையாளர்கள் 100 பேர் கூடுறோம். அவங்களுடன் நாங்களும் போய் ரஜினியை மீட் பண்ணப் போறோம். அப்போ இந்த கோரிக்கையை அவரிடம் நேரா வைப்போம். இது எதற்கும் ரஜினி சம்மதிக்கலைன்னா, இன்னும் பதினைஞ்சு கோடி ரூபாய் அவர் கொடுத்தால் போதும். நாங்க கஷ்டத்துலேர்ந்து தப்பிச்சுப்போம்’ என்றார் இறுதியாக!

என்னை புதைக்கும் போது கைகளை விரித்து வைத்து புதையுங்கள். அப்போதுதான் இந்த உலகத்தையே வென்ற அவெக்சாண்டர் வெறுங்கையோடுதான் போகிறான் என்பது புரியும் என்ற நிஜத்தை ரஜினிக்கு ஒருமுறை சொன்னாராம் வைரமுத்து. ‘அடடா… அருமையா இருக்கே. இதை பாட்டுல கொண்டு வர முடியுமா?’ என்றாராம் ரஜினி. ‘ஒருவன் ஒருவன் முதலாளி…’ பாடலில் அந்த தத்துவத்தை அப்படியே பாடலுக்குள் கொண்டு வந்திருப்பார் வைரமுத்து.

அதெல்லாம் ஏனோ இந்த நேரத்தில் மனதில் வந்து தொலைக்கிறது. என்னத்தை செய்ய….?

5 Comments
 1. தமிழ்ச்செல்வன் says

  Extract of The Hindu paper – dated 24th May 2015 Last year, Rajinikanth’s Lingaa fetched Rs. 21 crore, the highest ever for a Tamil film in the overseas markets. And in the first five months of 2015, four films have done extraordinary business – Shankar’s I, Mani Ratnam’s O Kadhal Kanmani, Raghava Lawrence’s Kanchana-2, and Ajith’s Yennai Arindhaal Ram Muthu, the Managing Director of Atmus Entertainment, a leading US-based distributor of Tamil films, says: “The USA market is becoming bigger by the year and can do $1.5 million — $2 million business. But that kind of business happens only for Rajinikanth films. USA audiences like Rajinikanth films the most, followed by films from Shankar, Mani Ratnam and Kamal Hassan. Kamal’s Uttama Villain, a failure in India, did $585,000 in the US market. These four people can bring more than $500,000 in revenue. The highest for Vijay, Ajith and Suriya were all under $400,000. Now, Vijay has Kaththi at $620,000, Ajith hasYennai Arindhaal at $515

 2. Pandiyan says

  தலைவர் ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அற்ப பயல்களுக்கு சுளுக்கு எடுப்போம். எங்கள் இதய தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வம்புக்கு இழுத்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தெய்வத்தின் கட்டளைக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.

 3. நல்ல தம்பி says

  யார் இந்த சிங்காரவேலன்?
  எப்படி இவ்வளவு செயல்கள் செய்ய முடிந்தது ?
  யார் இந்தாளுக்கு பக்க பலம் ?
  எப்படி தலைவரை இப்படி எதிர்க்க, அசிங்க பண்ண முடிந்தது ?
  எப்படி இப்படி கூட்டம் போட முடிந்தது?
  எப்படி இந்த ஆள் ஒரு தனி மனிதனாக இப்படி எல்லாம் செய்தும் செய்துகொண்டும் இருக்க முடிகிறது?

  இந்த திரை உலகில் எவ்வளவு ஜாம்பன்வகள் இருந்தும் ஏன் ஒருவரும் இது பற்றி பேசவோ, எதிர்க்கவோ, அட, தலைவர் கூட ஒரு சப்போர்ட் ஆ கூட நிக்கவில்லையே?

  தலைவர் இவ்வளவு செல்வாக்கு படைத்தவராக இருந்தும் ஏன் ஒன்னும் செய்ய முடியவில்லை? .

  தலைவர்காக ஏன் ஒருவரும் துணை நின்று சப்போர்ட் செய்யவில்லை?
  அதை விடுங்கள், நீங்கள் அவனை துகில் உரித்து காட்டி விடீர்கள், மற்ற பத்திரிகைகள் ஏன் ஒன்றும் செய்யவில்லை?

  அப்படி என்றால், தலைவருக்கு திரை உலகில் நண்பர்கள் யாரும் இல்லையா? போற்றி காக்க வேண்டிய கலைஞனை, 25 வருடங்களுக்கு மேலாக மக்களை மகிழ்வித்த கலைஞனை, பல பேர்களுக்கு வாழ்கை கொடுத்த, உதவி செய்த, செய்து கொண்டிருக்கின்ற மனிதனுக்கு சப்போர்ட் செய்ய யாரும் இல்லையா? தட்டி கேட்க ஒரு நல்ல நண்பனும் ரசிகனும் இல்லையா?

  அட, நம்ம தலைவர் ரசிகர்கள்? என்ன செய்தார்கள்? சும்மா செய்தியை பார்த்து, ப்ளாக்லே எழுதி ஜஸ்ட் ஷேர் பன்னார்களே? நல்ல தானே இருந்ந்தது லிங்கா ஏன் ஓட வெக்க முடியலை?

  எப்படி ஒரு தனி மனிதன் ஒரு படத்தை அதுவும் தலைவர் படத்தை 3 நாள்லே பலாப் நு சொல்ல வெச்சு, செய்தி ஆக்கி, நிருபிச்சு காட்நாங்க்லே, எப்படி ஐயா?

  அப்படி என்றான் இந்த ஆளு மேலே அவ்வளவு பயமா ? அப்படி என்றால் அவன் பின்னணி என்ன?
  ஏன் தலைவரை குறி வெக்கறாங்க?
  தலைவர் எவ்வளவு பலம் இருந்தும் ஏன் சும்மா இருக்கார் ?

  இவன் இப்படி தான் இருப்பான ? இவனை யார் தூண்டி விடுறாங்க ? எதனால்? இதற்கு ஒரு முடிவு இல்லையா?

 4. ஸ்வேதா ரவி says

  தலைவா !!! தலைவா !!! எளிமையின் சிகரம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். நீங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 5. Saravanan says

  சிங்காரவேலன் குழுவினருக்கு விநியோக உரிமை கொடுத்தால் அவ்வளவு தான் – கொதிக்கும் திரையுலகம் !!!
  லிங்கா, கங்காரு, புறம்போக்கு என்ற பொதுவுடமை என்று விநியோக உரிமை பெறும் எல்லாத் திரைப்படங்களிலும் நஷ்டக் கணக்கு காண்பித்து பிரச்னை கிளப்பி வருகிறார்கள் சிங்காரவேலன் தரப்பினர்.

  “எல்லா வியாபாரங்களிலும் லாப நஷ்டம் சகஜம். திரைத்துறையைப் பொறுத்தவரையில் லாபம் எவ்வளவு அதிகமோ, அவ்வளவு நஷ்டமும் இருக்கும். காலம் காலமாக இந்தத் துறையில் ஈடுபட்டு வரும் பலரும் நஷ்டம் வரும் போதெல்லாம் சுமுகமாகப் பேசித் தீர்த்து வரும்நிலையில், சிங்காரவேலன் குழுவினர் போட்ட காசுக்கு ஒரே வாரத்தில் பல மடங்கு லாபத்தை எதிர்பார்த்து, அது வந்தாலும், வராவிட்டாலும் நஷ்டக் கணக்கைக் காண்பித்து பிரச்னை செய்து வருகிறார்கள். லேட்டஸ்டாக ‘புறம்போக்கு என்ற பொதுவுடமை’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் என்று நடத்தப்பட்டது. சமீப காலமாக திரைப்படங்கள் தயாரித்து வெளிவருவதே சிரமமான சூழலில் இந்த மாதிரியான ‘சக்சஸ் மீட்’டுகள் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை பார்க்க மக்களை மேலும் கவர்ந்திழுக்கும். புறம்போக்கு என்ற பொதுவுடமை ஊடகங்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் இந்தப் படத்தின் சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்களான சிங்காரவேலன் குழுவினர் ‘எங்களுக்கு நஷ்டம். இதில் UTV தயாரிப்பு நிறுவனம் சக்சஸ் மீட் நடத்தியது சரியல்ல” என்ற ரீதியில் அறிக்கை விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, இவர்களின் தொடர் நடவடிக்கைகள் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு திட்டத்துடன் திரைத்துறையில் நுழைந்து பிரச்னைகளைக் கிளப்பி திரைத்துறையைக் கைப்பற்றி யாருக்கோ ஜால்ரா அடிக்கும் நடவடிக்கைகள் இது. இனிமேலும் இந்தக் குழுவினருக்கு யாரும் விநியோக உரிமை கொடுத்தால் என்னவாகும் என்பதை வரிசையாக ஆராய்ந்து பார்ப்பது நல்லது” என்கிறார்கள் திரைத்துறையினர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மீண்டும் கெட்டவன்? சிம்புவை நெருக்கும் பழைய கோஷ்டி!

சொம்புக்குள் தலையை விடுவதும் ஒன்று. சிம்புவை வைத்து படம் எடுப்பதும் ஒன்று என்கிற உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக பொய்யாக்கி வருகிறார் சிம்பு. அதிசயம்... ஆனால் உண்மை! செல்வராகவன்...

Close