ரஜினி கமல் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! கோவையில் ஸ்டார்ட் ஆனது முதல் குமுறல்!
இந்த மழை இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ? நேற்று வரை உச்சாணிக் கொம்பில் இருந்த பளபள ஹீரோக்களின் சட்டையை பற்றி இழுத்து தெருவில் இழுத்து விடும் போலிருக்கிறது மக்களின் கோபம். “மக்களுக்கு நிறைய செய்ங்க. ஆனால் விளம்பரம் இல்லாமல் செய்ங்க” என்று ரஜினி உத்தரவிட்டதாகவும், அவரது சார்பில் அவரது மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் லாரி லாரியாக உணவு பொருட்களை அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி கூறப்பட்ட பல தகவல்கள் பின்னாளில் பல்லிளித்து வருவதால், எதையும் நம்பத் தயாராக இல்லை மக்கள்.
விஜய் மண்டபத்தை திறந்துவிட்ருக்கார். யாரு வேணாலும் போய் தங்கிக்கலாம் என்று வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக்கிலும் எழுதிய புண்ணியவான் யாரோ? அதை நம்பி மண்டபத்துக்கு போனால், மண்டபமே ஜெகஜ்ஜோதியாக இருந்தது. கேட்டால் இங்க கல்யாணம் நடந்துகிட்டு இருக்கு. நீ ஏன்யா இங்க வந்தே? என்று ஒரு குடும்பத்தை விரட்டினாராம் வாட்ச்மேன்.
வெந்த புண்ணில் சந்தனம் தடவினாற் போல தெலுங்கின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் 2 கோடி ரூபாய் தமிழக வெள்ள நிவாரண நிதி தருவதாக அறிவித்திருப்பது இவர்களையும் அவரையும் அவர்களையறியாமல் ஒப்பீடு செய்ய வைத்திருக்கிறது. எங்கோ சம்பந்தமில்லாத ஒருவர் நமக்கு உதவும்போது, இவர்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள் என்று குமுறிய அவர்கள் இன்று ஒரு காட்டு காட்டிவிட்டார்கள்.
கோவை சங்கனூர் பகுதியில் பாரத் சேனா என்ற அமைப்பினர் இன்று ரஜினி கமல் இருவரது உருவப்படத்தையும் எரிக்க முற்பட்டிருக்கின்றனர். அவர்களை போலீஸ் தடுத்து பொம்மைகளை கைப்பற்றி எடுத்துச் சென்றதாம்! பொம்மைகளை காப்பாற்றி விடலாம். இருவரது மீதும் விழுந்த கரும்புள்ளியை எப்படி அழிப்பது? காலம்தான் முடிவு செய்ய வேண்டும்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ரசிகர்மன்றங்கள் மூலமாக உணவு, துணிமணிகள், போர்வை, மருந்து மாத்திரைகள், பாய்கள், தலையணைகள் உள்ளிட்ட உதவிப்பொருட்களை வழங்கி வருகிறார். தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.10 கோடி மதிப்பிலான நிவாரண உதவிப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து உள்ளார். இது ஆதரபூர்வமான உண்மை.
நல்லா எரியுங்கடா. தலைவர் ரஜினி மேல் உள்ள கண் திருஷ்டி அகன்று விடும். அவரும் நீண்ட ஆயுளுடன் இருப்பார்.
(ஆமா, நீங்க என்னடா செய்திங்க கொஞ்சம் சொல்ல முடியமா)
இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள்.
அவரை என்றும் நினைவில் வைத்து இருப்போம்.