ரஜினி படம்? இது புது ட்விஸ்ட்!

ரஜினியாகவே முன் வந்து ஆளாளுக்கு ஒண்ணு எழுதாதீங்க. நிஜம் இதுதான் என்று சொல்லுகிற வரைக்கும் நாளொரு யூகமும் பொழுதொரு தகவலுமாக பொளந்து கட்டுகிறார்கள் ஊடகங்களில். ரஜினியின் அடுத்த படம் அதுதான்… இல்லையில்ல… இதுதான் என்று ஏராளமான ஹேஷ்யங்கள்.

இது லேட்டஸ்ட்! முன்பு ஏஜிஎஸ் நிறுவனத்திடம் ரஜினி படத்திற்காக ஷங்கர் ஒரு கொட்டேஷன் கொடுத்தாரில்லையா? அதற்கப்புறம் ஏஜிஎஸ் நிறுவனம் அடைந்த அதிர்ச்சியில் அத்தனை பேரும் டங்காமாரியாகியிருந்தார்கள். ஏன்? சுமார் 240 கோடி பட்ஜெட்டாம் அது. எப்படியோ? அது நடக்காது என்று முடிவான பின்புதான் ஷங்கர் லைக்கா நிறுவனத்தை சந்தித்தார். ரஜினி ஹீரோ, கமல் வில்லன், இல்லையில்ல. விக்ரம்தான் என்று அங்கும் திரை கட்டி படம் ஓட்டினார்கள்.

இப்போது திடீர் திருப்பம். ரஜினி மகள் ஐஸ்வர்யா ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்காக இயக்கிய படம்தான் வை ராஜா வை. அந்த பழக்கத்தில் தனது அப்பாவுக்காக அவரே பேசினாராம் ஏஜிஎஸ்சிடம். உங்க கம்பெனியில் அப்பா நடிக்கிறார். அதுவும் உங்களுக்கு கைக்கடக்கமான பட்ஜெட்டில் என்றாராம். இந்த படத்தில் நடிப்பதற்காக ரஜினிக்கு ஐம்பது கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல்.

இந்த படத்தை ஷங்கர் இயக்கப் போவதில்லை என்றும், வேறொரு முக்கியமான இயக்குனரிடம் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் புது தகவல்களை கிளப்புகிறது கோடம்பாக்கத்தின் நம்பிக்கைக்குரிய வட்டாரம்.

ஒருவேளை இது நடந்தால், ஷங்கர் ரஜினி காம்பினேஷன் படம் அதற்கப்புறம்தானாம்.

ரஜினி படம் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் மாறி மாறி வந்து குழப்புவதால், ரஜினி போகிறாரோ இல்லையோ, அவரது ரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து இமயமலைக்கு அமைதி தேடி போனாலும் ஆச்சர்யமில்லை.

Read previous post:
இசையமைப்பதைத் தேடிப் பயணப் படவில்லை! -கங்காரு இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ்

பிரபல​ ​பாடகராக பல பாடல்கள் பாடியுள்ள ஸ்ரீநிவாஸ் முதலில் இசையமைத்துள்ள படம்தான் 'கங்காரு'. அவர் தன் அனுபவங்களை இங்கே கூறுகிறார்... " நான் தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

Close