ஸ்பெஷல் கரிசனம்… ரஜினியால் உயரும் அனிருத்!

ஒரு வகையில் நெருங்கிய சொந்தம் என்பதாலும் இருக்கலாம். அல்லது இளம் வயசில் இப்படியொரு துள்ளலா என்றும் நினைத்திருக்கலாம். ரஜினியின் பரிபூரண ஆசி அனிருத்துக்கு எப்பவுமே இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் போல நல்லா போயிட்டு இருக்கும் போதே நடிப்பு மீது ஆசை வந்தது அனிருத்துக்கு. ‘கண்ணா… இதெல்லாம் பார்க்க இனிப்பா இருக்கும். பக்கத்துல போனா துவக்கும்’ என்று அட்வைஸ் கூறி அனிருத்தின் நடிப்பு ஆசைக்கு அணை போட்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

அதனால் தன்னை தேடி வந்த ஒன்றிரண்டு ஹீரோ வாய்ப்புகளை உடனே உதறி தள்ளினார் அனிருத். அதற்கப்புறமும் தொடர்ந்து ரஜினியின் அட்வைஸ்களை அவ்வப்போது கேட்டு அதன்படி நடக்கிற அளவுக்கு பக்குவ சீலன் ஆகிவிட்டார் அவர். அண்மையில் யூ ட்யூபில் வெளியிட்ட இவரது பாடல் ஒன்று அனிருத்துக்கு தீராத சிக்கலை ஏற்படுத்த, ரஜினியின் உதவியால்தான் அவர் தப்பித்ததாகவும் கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர் மீண்டும் அனிருத்துக்கு வேறொரு பரிவட்டத்தை கட்டுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறாராம்.

ரஜினி படத்திற்கு இசையமைப்பதென்பது அவ்வளவு சாதாரணமாக கிடைத்துவிடக் கூடிய வாய்ப்பல்ல. ஒரு பாடல் சுமாராக இருந்தாலும், ரசிகர்களின் ஈ மெயிலுக்கும், சில அதிதீவிர ரசிகர்களின் எரிச்சலுக்கும் ஆளாக நேரிடும். அண்ணாமலை படத்திற்கு தேவா இசையமைத்தபோது, ஒரு பாடல் சரியில்லை என்று கருதிய ரசிகர்கள் தேவாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த கதையெல்லாம் நடந்தது. அப்படியொரு ரிஸ்க் மிகுந்த வாய்ப்பை தனது ரிலேட்டிவ் அனிருத்துக்கு வழங்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ரஜினி.

லிங்காவுக்கு அடுத்ததாக வரப்போகும் ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைக்கலாம் என்கிறது தகவல்கள். அதை அனிருத்தும் ஆமோதிக்கிறார்.

ஹ்ம்ம்ம்… காலத்தின் கையில்தான் எத்தனையெத்தனை சோழிகள்?

Read previous post:
சூர்யாவுக்கு யாருமே நினைத்துப்பார்க்காத ஜோடி?

சாதாரணமாகவே கேரளப் பெண்கள் அழகு. அந்த அழகுக் கேரளமே ‘அடடடா அழகு’ என்று வியந்து வியந்து கொண்டாடிய ஒரு அழகுதான் மஞ்சு வாரியர்! குடும்ப வாழ்க்கை கசந்து...

Close