திருச்சியில் லிங்கா ரிலீஸ் குழப்பம் ! தொலைபேசி வழியாக ரஜினியே தலையிட்டு பேச்சு வார்த்தை

உலகெங்கும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் வெளியாகவிருக்கிறது லிங்கா. ஆனால் திருச்சி தவிர…. இன்னும் எந்தெந்த திரையரங்குகளில் லிங்கா ரிலீஸ் ஆகும் என்கிற குழப்பம் நீடிப்பதால், ரசிகர்கள் கொந்தளிப்புடன் காணப்படுகிறார்கள். இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒரு மீட்டிங் நடைபெறவிருப்பதாகவும், அதற்கப்புறம்தான் குழப்பம் தீரும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்தது என்ன? நாம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் இதுதான்.

திருச்சி விநியோக உரிமையை துத்துக்குடியை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் வாங்கியிருக்கிறார். இவருக்கும் திருச்சி பகுதியிலிருக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் கடந்த பல மாதங்களாகவே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருக்கிறதாம். இந்த நிலையில் மிக முக்கியமான படமான லிங்கா அவர் வசம் போய்விட்டதால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இருந்தாலும் எவ்வித குழப்பத்திற்கு இடமளிக்க வேண்டாம் என்பதால் சிங்காரவேலன், சேலத்திலிருக்கும் விநியோகஸ்தரான சிவா என்பவரிடம் திருச்சி லிங்கா ரிலீஸ் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாராம். அவர் தியேட்டர்காரர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் இவர்கள் தரப்பு சொன்னது இதுதான்.

திருச்சியிலிருக்கும் 12 தியேட்டர்களுக்கும் லிங்கா வேண்டும். அட்வான்ஸ் தொகையாக எல்லா தியேட்டர்களுக்கும் சேர்த்து ஒரு கோடிதான் தருவோம். அதுபோல டிக்கெட் விலையை 100 ரூபாய்க்கு குறைவாகதான் விற்போம். அதையும் அதிகப்படுத்திக் கேட்கக் கூடாது என்பது தியேட்டர்காரர்களின் கண்டிஷன். இதற்கு சிவா ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த இழுபறி காரணமாக எந்த தியேட்டரில் பேனர் கட்டுவது என்பது புரியாமல் தவிக்கும் ரசிகர்கள் விஷயத்தை நேரடியாக ரஜினி காதுக்கே கொண்டு போயிருக்கிறார்களாம்.

நடிச்சோம். சம்பளம் வாங்குனோம். போதும் என்று ஒரு நாளும் இருந்துவிட மாட்டார் ரஜினி. படத்தின் விநியோகம் சார்ந்தும் யோசிப்பது, ரிலீஸ் ஆன பின் ஒவ்வொரு தியேட்டருக்கும் தானே போன் செய்து பேசுவது என்பதெல்லாம் ரஜினியின் வெகு கால வழக்கம். இந்த முறையும் இந்த பிரச்சனையில் அவரே தலையிட்டு சிங்காரவேலன், மற்றும் சிவாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். பிரச்சனை சுமூகமாக முடிந்தால், அதில் ரஜினியின் பங்குதான் அதிகமாக இருக்கும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அடம் பிடிச்சே ஜெயிச்சுருவ… ஐஸ்வர்யா தனுஷை பாராட்டிய பாலா

அடுத்த தலைமுறை பாய்ச்சல் காட்டும் நேரமிது. அதை சரியாக உணர்ந்து முறையாக ஜெயிக்க கிளம்பியிருக்கிறார்கள் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும், இளையராஜாவின் மகன் யுவனும், வைரமுத்துவின் மகன் கார்க்கியும்!...

Close