ட்வெண்ட்டி ஃபர்ஸ்ட் வர்றாரு ரஜினி முருகன்? சங்கடம் தீர்த்த சரஸ்வதி பூஜை!

ஒத்தாப்ல நாலைஞ்சு நாள் லீவு வந்தால், அதுதான் கோடம்பாக்கத்தின் ரிசர்வ் பேங்க் சாவி! பார்ஷ் படத்திலிருந்து பாழாப் போன படம் வரைக்கும் அந்த குறிப்பிட்ட நாளில் ‘நானும் வர்றேன்’ என்று கழுத்தை நீட்டிக் கொண்டு நிற்கும். ‘கழுத்தறுப்பா முடியாம இருந்தா சரி…’ என்று ஊரிலிருக்கும் தெய்வத்தையெல்லாம் வேண்டிக் கொண்டு டிக்கெட் எடுப்பான் ரசிகன். நாலு நாள் கலெக்ஷனை குறி வைத்து வரும் இப்படங்களில் ஊரே கொண்டாடுகிற மாதிரி ஒரு படம் இடம் பெற்றிருந்தால் ரசிகனின் துள்ளல் எப்படியிருக்கும்?

இந்த முறை அந்த கொண்டாட்டத்தை பார்த்துவிடலாம் போலிருக்கிறது. யெஸ்… கடந்த சில மாதங்களாகவே ஏகப்பட்ட இழுபறியில் தத்தளித்து வந்த ரஜினி முருகன், இந்த 21 ந் தேதி திரைக்கு வருகிறதாம். சற்றே அதிகாரபூர்வமான தகவலும் கூட!

அங்கே கடன், இங்கே கடன் என்று சிறு சிறு கடன்களில் தத்தளித்து வந்த திருப்பதி பிரதர்ஸ், சற்று பெரிய கடனாக வைத்திருந்தது ஈராஸ் நிறுவனத்திடம்தான். வட்டியும் முதலும் சுளையா எண்ணி வச்சாலொழிய படத்தை வெளியிட ஒத்துழைப்பு தர மாட்டேன் என்று கூறி வந்தது ஈராஸ். “முதல்ல படம் வெளியில் வந்தால்தானே உங்க கடன் அடையும்? நீங்களே குறுக்கே நின்னா படம் எப்ப வர்றது? கடன் எப்ப அடையறது?” என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம், பிடி கொடுக்காமலிருந்த ஈராஸ், தற்போது முழு மனதோடு இறங்கி வந்துவிட்டதாம்.

எல்லா பஞ்சாயத்துகளும் சுலபமாக முடிந்துவிட்ட படியால், 21 ந் தேதி சரஸ்வதி பூஜை தினத்தில் திரைக்கு வருகிறார் சிவகார்த்திகேயன்! குடும்பம் குடும்பமா கொண்டாடக் கிளம்புங்கப்பு!

Read previous post:
சத்யராஜின் புது முயற்சி! அறுபதிலும் ஆசை வரும்?

அறுபது வயதாகிறது சத்யராஜுக்கு. இத்தனை ஆண்டுகாலமாக அவருக்கு வராத ஆசை, பாகுபலிக்கு பிறகு வந்திருக்கிறது. அந்த படத்தால் அவருக்கு சேர்ந்த அண்டை மாநில ரசிகர் கூட்டமும், அதையும்...

Close