ரஜினிக்கே ஸ்டைல் காட்டிய ரஞ்சித்! ரஜினி விழுந்ததும் அங்கேதானாம்…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே சாம்பிராணி போட்ட மாதிரி ஆகிவிட்டது! வேறொன்றுமில்லை. சினிமாவுக்கு வந்து ரெண்டு படம்தான் பண்ணியிருக்கார். அதுக்குள்ள ரஜினி கால்ஷீட்டா என்று கோடம்பாக்கம் போட்ட சாம்பிராணி புகைதான் இப்போது தமிழ்நாட்டையை புகைமூட்டம் ஆக்கி வருகிறது. இந்த பொறாமைக்கெல்லாம் அஞ்சாத ரஞ்சித் மலேசியாவில் கதை விவாதத்தில் இருக்கிறார்.
இன்று ரஜினியின் புதிய படம் பற்றிய முறையான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தாணு. அறுபது நாட்கள் மலேசியாவில் படப்பிடிப்பு, அறுபது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு என்று திட்டம் வகுத்திருக்கிறார்கள். இதில் ரஜினி கால்ஷீட் தர வேண்டியது மாதத்திற்கு 15 நாட்கள் மட்டும்தானாம். இந்த படத்தில் ரஜினி நடிக்க வந்ததன் பின்னணி என்ன?
தாணுதான் இப்படத்தின் தயாரிப்பாளர் என்பதெல்லாம் தெரிவதற்கு முன்பே, சவுந்தர்யா அஸ்வின் மூலமாக ரஜினிக்கு கதை சொல்ல போய்விட்டார் ரஞ்சித். இரு நண்பர்களுக்கு இடையே வரும் பகை பற்றியதுதான் கதையாக இருந்திருக்கிறது. அதில் சில திருத்தங்களை சொல்லி அனுப்பி வைத்த ரஜினி, ஸ்பாட்டிலேயே அந்த கதையை அப்ரூவலும் செய்துவிட்டாராம். அதற்கப்புறம் அவர் சொன்ன திருத்தங்களோடு வந்த ரஞ்சித், அப்படியே நடித்துக் காட்டிவிட்டாராம்.
பொதுவாக ரஜினியிடம் சீன் சொல்லிவிடுவார்கள். மற்றதை அவர் பார்த்துக் கொள்வார். ஆனால் ரஜினி என்னனென்ன மாதிரி ஸ்டைல் பண்ண வேண்டும் என்பதை கூட அப்படியே செய்து காட்டியிருக்கிறார் ரஞ்சித். இதில்தான் ஆடிப்போனாராம் ரஜினி. ரஞ்சித்தின் ஆர்வம் வெறும் ஆர்வ கோளாறாக இல்லாமல், ரஜினியே ஏற்றுக் கொள்வது போல இருக்கவேதான் இந்த ஆச்சர்யம். உடனே தயாரிப்பாளர் தாணுவை பார்க்க சொல்லியனுப்பினாராம். இதோ- சுபயோக சுபதினத்தில் படம் பற்றிய முழுமையான அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள். இதில் ரஞ்சித்துக்கு அடித்த அதிர்ஷ்டம் போலவே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் அதிர்ஷ்டம். அவர்தான் இந்த படத்திற்கு இசை. (கானா பாலாவை ரஜினிக்கு குரல் கொடுக்க வச்சுராதீங்க புண்ணியவானுங்களா)
ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா, நயன்தாரா, காஜல் அகர்வால் மூவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அண்ணீன்னு ஆசை தீர யாரை அழைக்கப் போகிறார்களோ ரஜினி ரசிகர்கள்?
ஆல் ஆர் வெயிட்டிங்….
தலைவா………………………… இந்த படத்தின் இமாலய வெற்றி நிச்சயம். ஓ நண்பா நண்பா நண்பா வா கலக்கலாம் வா…….
தலைவா வாருங்கள். ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்.
வெற்றிக்கு ஒருவன் சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க.
ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் . வாழ்த்துக்கள் தலைவா ….
தலைவா !!! என்னுடைய மனபூர்வ வாழ்த்துக்கள்.
சாதனை படைப்போம் வாருங்கள்.