ரஜினி யோசனை! ரஞ்சித் கேட்பாரா? ஒரு விறுவிறு… பரபர…

கிட்டதட்ட 65 நாட்களுக்கான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்துவிட்டது. இன்னும் 45 நாட்கள் சென்னையில் எடுக்கப் போகிறார்களாம். மலேசியா ஷுட்டிங்கின் போது யூசர் பிரண்ட்லியாக இருந்த ரஜினி, சென்னையில் சற்று இறுக்கமாகவே காணப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அங்கு ரசிகர்கள் குவிந்தாலும் சந்தோஷம். குடும்பத்தோடு வந்து நின்று கும்பிட்டாலும் சந்தோஷம். இங்கு அப்படியா? நெர்வஸ்… நெர்வஸ்…! முக்கியமாக ரஜினியை வைத்துக் கொண்டு அவுட்டோர் காட்சிகளை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்… இந்த படம் வயதான கெட்டப் ரஜினியில் ஆரம்பித்து இளமையான ரஜினியில் வந்து முடிகிறது. கபாலி யார்? அவரது கம்பீரம் என்ன? என்பதுதான் படத்தின் டிராவலாம். டைரக்டர் ரஞ்சித், ஒரு படம் எப்படி ஆரம்பித்து எப்படி போகுமோ, அப்படிதான் ஷுட்டிங்கையே எடுப்பாராம். நடுவில் இருக்கிற காட்சியை முன்னாலும், ஆரம்ப காட்சியை கடைசியிலும் எடுக்கிற வித்தை அவருக்கு உகந்ததல்ல! அப்படிதான் இந்தப்படமும் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

திடீரென ரஜினி ஒரு யோசனை சொன்னாராம். அதாவது கதை இளம் ரஜினியிலிருந்து ஆரம்பித்து, ஓல்டு கெட்டப் ரஜினியில் முடியட்டுமே என்று! ரஜினியே சொல்லியாச்சு. அப்புறம் என்ன? என்பதுதானே நமது முடிவாக இருக்கும்? ஆனால் டைரக்டர் அந்த யோசனையை ஏற்பதா, வேண்டாமா? என்ற குழப்பத்திலிருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் உலா வருகிறது.

எந்த ரஜினி எங்கே இருந்தால்தான் என்னப்பா? படம் முழுக்க அவர் வர்றாருல்ல? அதுபோதும் என்பார்கள் போலிருக்கிறது அவரது ரசிகர்கள்! ரஞ்சித் காதுல விழுதா?

1 Comment
  1. கார்த்திகேயன் says

    Super Star Rajini VAAZGA VAAZGA VAAZGA

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஏன் வழக்கு போட்டேன்? சிம்பு விவகாரத்தில் பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி விளக்கம்! (வீடியோ)

சிம்பு மீது நாடெங்கிலும் இருந்து பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் இப்பவும் நான் செய்தது சரி என்கிற மனோபாவத்திலேயே அவர் பதில் சொல்லி வருகிறார். நடந்தது...

Close