தனுஷை உச்சி முகர்ந்த ரஜினி…!

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், இப்போது மேலும் ‘வொண்டர் ’ ஆகியிருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ கலெக்ஷன் சுமார் நாற்பது கோடியையும் தாண்டிப் போயிருக்கிறது. தனது சறுக்கலை எள்ளி நகையாடிய அத்தனை பேருக்கும் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் தனுஷ். ஒரு படம் வெற்றியா, தோல்வியா? அதன் கலெக்ஷன் எவ்வளவு என்பதையெல்லாம் வைத்து மனிதர்களை தீர்மானிப்பவரல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கு பிடித்திருந்தால், சம்பந்தப்பட்ட நபர் எங்கிருந்தாலும் வரவழைத்து பேசிவிடுகிற குணம் அவருக்குண்டு.

ரஜினிக்கும் தனுஷுக்கும் டேர்ம் சரியில்லை. வேலையில்லா பட்டதாரி படத்தில் ரஜினியை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தார் தனுஷ். ஆனால் அதை நாசுக்காக தவிர்த்துவிட்டார் ரஜினி என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் தகவல்கள் உலவுவதுண்டு. ஆனால் எல்லாவற்றையும் பிரேக் பண்ணிவிட்டது அண்மையில் நடந்த ரஜினி தனுஷ் சந்திப்பு. அப்படியே தனுஷை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தாராம் ரஜினி. மருமகனின் படம் வெற்றி என்பதால்தான் இந்த பாராட்டு என்று நினைத்தால், நீங்கள் ஏமாந்து போவீர்கள். இந்த பாராட்டு அதற்கு அல்ல. அதையும் தாண்டி…!

வேறொன்றுமில்லை. தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தை அவர் துவங்கும் போதே அதில் நான்கு பங்கு தாரர்களை இணைத்துக் கொண்டாராம். அந்த நான்கு பேர் யார் யார் தெரியுமா? முதலில் தனுஷ், அதற்கப்புறம் மனைவி ஐஸ்வர்யா. அதற்கப்புறம் சேர்த்து கொண்ட பங்கு தாரர் லிஸ்ட்தான் ரஜினியை இந்தளவுக்கு நெக்குருக வைத்திருக்கிறது. ஒருவர் ஐஸ்வர்யாவின் அம்மா லதா ரஜினிகாந்த். மற்றொருவர் தனுஷின் அம்மா. இன்று கலெக்ஷன் ஆகியிருக்கும் நாற்பது கோடி, வெறும் தியேட்டர் கலெக்ஷன்தான். சேட்டிலைட், எப்.எம்.எஸ், வேற்றுமொழி உரிமை என்று அந்த படம் வசூலித்தது இன்னும் இன்னும் பல கோடிகள். இந்த லாபத்தையெல்லாம் அவர் அக்ரிமென்ட்டில் குறிப்பிட்டிருந்ததை போல நேர்மையாக பிரித்துக் கொடுக்கப் போகிறாராம்.

இவ்வளவு தகவலும் ‘வேலையில்லா பட்டதாரி’ வெற்றிக்கு பின்புதான் தெரிய வந்திருக்கிறது ரஜினிக்கு. மருமகன்கள் பணம் பிடுங்கும் காலம் இது. ஆனால் நேர்மையாக உழைத்து சம்பாதித்ததும் அல்லாமல், அவரது உழைப்பில் வந்த பணத்தை தன் மனைவிக்கும் பிரித்துக் கொடுக்க முன் வருகிறாரே… மருமகனின் மனசு எவ்வளவு சிறந்தது? இதுதான் ரஜினியை நெக்குருக வைத்ததாம். அதுமட்டுமல்ல, வொண்டர்பார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் லதா ரஜினியின் கைகளால்தான் சம்பளமே கொடுக்க வைக்கிறாராம்.

இதையெல்லாம் கேள்விப்பட்டுதான் நெக்குருகி நிற்கிறார் ரஜினி.

1 Comment
  1. Unami says

    Boss, itthellam chinna meanna pottu periya meena pudikira vellai boss. Ithu kuduva engalukku puriyathu. Marumagan payangara ushar party.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாலாபுறத்திலும் நெருக்கடி கத்தி…இனி அவ்ளோதான்?

ராஜபக்சே, சுபாஷ்கரன் அல்லிராஜா, லைக்கா, காமன்வெல்த் மாநாட்டுக்கு உதவி, எல்லாவற்றையும் தாண்டி இப்போது புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது கத்தி. இந்த படத்தின் கதை தொடர்பான விவகாரம்...

Close