ரஜினி திட்டவட்டம்! பல் இளித்தது பா.ஜ.க வின் நம்பிக்கை!

‘உருண்டையா இருக்கறதெல்லாம் பந்து, உப்பலா இருக்கறதெல்லாம் பூரி’ன்னு நம்புகிற கூட்டம் ஒன்று, ரஜினியை வச்சு ராஜாவாகிடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. உங்க கணக்குல சைபரைத் தவிர ஒண்ணுமில்லே என்று உணர்த்தாமல் உணர்த்திவிட்டார் ரஜினி.

இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழக பி.ஜே.பி க்கு வேப்பங்காய் சூப்! ஆனால் வேகமா விழுந்தாலும் வேஷ்டி கிழியல பொசிஷனில் நின்று மாறி மாறி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எச்.ராஜா, தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள். ‘அவர்தான் முன்னாடியே சொல்லிட்டாரே… நாடாளுமன்ற தேர்தல் எங்க இலக்கு இல்ல. சட்டமன்றம்தான்னு. அதைதான் இப்பவும் சொல்லியிருக்கார்’ என்று கம்பீரமாக கனைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவ்விருவரும்.

நிஜத்தில் ரஜினியின் இந்த அறிவிப்பு பா.ஜ.கவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கும். பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரை என் பெயரையோ, படத்தையோ, மன்றத்தின் கொடியையோ யாரும் பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருக்கிறார் அவர். ரஜினி அமைதியாக இருந்திருந்தால், தானாகவே அவர் தங்களுக்கு ஆதரவு தருவது போல் காட்சியை உருவாக்கியிருப்பார்கள். இப்போது அப்படி சொல்லவே முடியாதபடி ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கிவிட்டார் ரஜினி.

அதுமட்டுமல்ல, தலைமையின் சொல் மீறி ரஜினி ரசிகர்களும் ஈடுபட மாட்டார்கள் அல்லவா?

இந்த தேர்தலில் பி.ஜே.பி தமிழகத்திற்கு செய்து வரும் நன்மைக்கேற்ப வாக்குகள் மண்டையில் விழப்போவது நிச்சயம்! ரஜினி குறுக்கிடாமல் ஒதுங்கிக் கொண்டதற்கு பிற கட்சிகள் அவருக்கு தார்மீக நன்றி சொல்ல வேண்டியது முக்கியம்!

Read previous post:
நெருக்கடி கொடுத்த இயக்குனருக்கு செருப்படி கொடுத்த விஜய் சேதுபதி!

Close