ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார் ரஜினி! கூட்டத்தில் கொளுத்திப்போட்ட டி.ராஜேந்தர்

‘கல்கண்டு’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் வளாகத்தில் நடந்தது. நாகேஷின் பேரன் கஜேஷ் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். தலைமுறை வாழ்த்தும் நகைச்சுவை நடிகரின் பேரன் என்றால் சும்மாவா? விழா களை கட்டியது. தமிழ்சினிமாவின் முக்கிய புள்ளிகளான டி.ராஜேந்தரும், கே.பாக்யராஜும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.

இங்குதான் குப்பை லாரி குப்புற விழுந்தது போல ஒரு பெரிய பிரச்சனையை கிளம்பிவிட்டுவிட்டு போனார் டி.ராஜேந்தர். இப்போதிருக்கும் நகைச்சுவை நடிகர்கள் தயாரிப்பாளர்களை அழ வைக்கிறார்கள். 1500 ரூபாய் சம்பளம் வாங்கிட்டு என் படத்தில் நடிச்ச நகைச்சுவை நடிகர் இப்போ கோடிக்கணக்குல சம்பளம் கேட்கிறார் என்றெல்லாம் சந்தானத்தை பெயர் சொல்லாமலே வாரினார். எல்லாம் ஓ.கே.

எங்கேயோ சம்பந்தமில்லாமல் இருக்கும் ரஜினியையும் உரசிவிட்டு கிளம்பியதுதான் ஹையோடா. நானெல்லாம் எதுக்கும் பயப்பட மாட்டேன். மூன்று முதல்வர்களை எதிர்த்தவன். (இந்த ஒரே வார்த்தையை மட்டும் இதுவரை ஓராயிரம் மேடைகளில் சொல்லியிருப்பார் அவர். இங்கும் அதே கேசட்தான்) ஆனால் ரஜினி அப்படியல்ல. பி.ஜே.பி கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ரஜினியை பா.ஜ.க வில் சேர அழைச்சிருக்காங்க. ஆனால் ரஜினி யோசித்து பதில் சொல்வதா சொல்லிட்டு இன்னைக்கு வரைக்கும் பதிலே சொல்லல. ஏன் தெரியுமா? அவர் ஜெயலலிதா மீது பெங்களூர்ல நடக்கிற சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக வெயிட் பண்ணிகிட்டு இருக்கார். அதை வச்சுதான் அவர் முடிவு சொல்லுவார் என்று பேச, மேடையில் இருந்தவர்கள் நெளிய ஆரம்பித்தார்கள்.

தன்னை துணிச்சல்காரர் என்று சொல்லிக் கொள்வது டிஆரின் உரிமை. ஆனால் அரசியல் கட்சி துவங்குவது பற்றியோ, பா.ஜ.க.வில் சேர்வது பற்றியோ கருத்தே சொல்லாத ஒருவரை கோர்த்துவிடுவதுதான் எந்த விதத்தில் சேர்த்தி என்று புரியவில்லை.

1 Comment
  1. Muthuramalingam says

    LONG LIVE OUR SUPER STAR RAJINIKANTH

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யாவின் ‘ஐ ’ பிரமோஷன்! வெளிவராத பின்னணி தகவல்கள்

நடிகர் சூர்யா கடந்த சில தினங்களாக தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பகுதிகளில் ஐ படத்தை பற்றிய தனது வியப்பை தெரிவித்து வருகிறார். அத்துடன் விட்டிருந்தால் கூட...

Close