முக்கிய பிரமுகரை சந்திக்க ரஜினி முடிவு? அடங்கப்போகிறது லிங்கா பிரச்சனை!
தமிழ்சினிமாவின் முக்கிய பிரமுகர்களை அவ்வப்போது சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார் ரஜினி. அவ்வளவு ஏன்? ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்த வளரும் இயக்குனர்களை கூட சில நேரங்களில் வீட்டுக்கு வரச்சொல்லி ஊக்கம் கொடுத்து அனுப்புவதும் அவரது விருப்பங்களில் ஒன்று. இந்த சந்திப்புகளில் எல்லாம் அடங்காத ஒரு சந்திப்புக்கு அவர் நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம். வருகிற வாரத்தில் அந்த சந்திப்பு நடக்கும் என்கிறார்கள். அவர் யார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிட வேண்டியதுதான். ஆனால்… ஒரே ஒரு க்ளூ. அவர் ஒரு முக்கியமான விநியோகஸ்தர். பவர்ஃபுல்லான நபரும் கூட.
லிங்கா பிரச்சனை இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுக்க காரணமே அவர்தான் என்று நினைக்கிறாராம் ரஜினி. முதலில் தனது ஏரியாவுக்குட்பட்ட பகுதிக்கான லிங்கா விநியோக உரிமையை இந்த பிரமுகர்தான் கேட்டிருக்கிறார். ஆனால் படம் அவர் கைக்கு போகவில்லை. சும்மாயிருப்பாரா அவர்? லிங்கா வசூல் லேசாக துவள்கிற நேரத்தில் ஒரேயடியாக படம் விழுந்தே விட்டது என்ற பிம்பத்தை ஏற்படுத்தியதே அந்த பிரமுகர்தானாம். பலரை உசுப்பிவிட்டு கல்யாண மண்டபத்திற்கு போய் அவரை சந்தியுங்கள் என்று திட்டம் போட்டுக் கொடுத்ததும் அவர்தானாம்.
சாட்சிக்காரர்களை சந்திப்பதை விட, சண்டைக்காரரையே சந்தித்துவிடலாம் என்ற முடிவுக்கு இப்போது வந்துவிட்டாராம் ரஜினி. வருகிற வாரத்தில் ஒரு நாள் இருவரும் சந்திக்கப் போகிறார்கள். அதற்கப்புறம் லிங்கா பிரச்சனை படிப்படியாக அடங்கி விடும் என்று எதிர்பார்க்கலாம்.
Till now LINGAA movie is highest grosser in South Indian Film Industry.
LINGAA is a blockbuster of 2014