கலைஞரை சந்திக்கிறார் ரஜினி! கருத்து கந்தசாமிகள் மூச்!

ரஜினி எப்போது கட்சி துவங்குவதாக அறிவித்தாரோ, அடுத்த நிமிஷமே அவரை போற்றிய வாய்கள் தூற்றத் தொடங்கிவிட்டன. முக்கியமாக திமுக பிரமுகர்களின் வாயில் சூயிங்கமாகிக் கிடக்கிறார் ரஜினி. ‘முதல்ல உன் மனைவி ஸ்கூல் நடத்துற இடத்துக்கு முறையா வாடகை கொடுக்கச் சொல்லு’ என்று டி.வி விவாதங்களில் வந்து பொங்குகிறார்கள்.

அக்கட்சியின் மூத்த பிரமுகர் அப்பாவு (வயது சுமார் 70) பேசும்போது, ‘ரஜினியோட நின்று போட்டோ எடுத்துகிட்டவுகள பாருங்க. அம்புட்டு பேருக்கும் அம்பது வயசுக்கு மேலாயிருச்சு. இனிமே கட்சி ஆரம்பிச்சு அவங்களை வச்சுகிட்டு என்ன பண்ணப்போறாரு?’ என்றார் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில். எழுவது வயசுல நீங்களே ஆக்டிவா இருக்கும்போது அவங்களுக்கு என்னவாம்? என்று கேட்காமல் அடக்கிக் கொண்டார் தொகுப்பாளர். போகட்டும்…

திமுக ஆதரவு தொலைக்காட்சிகளில் ரஜினிக்கு எதிராக சங்கு முழங்கவும் ஆரம்பித்துவிட்டது.

இந்த பஞ்சாயத்தையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை ரஜினி. இன்று மாலை திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை சந்திக்கப் போகிறாராம். அதிகாரபூர்வ தகவலாக இல்லாவிட்டாலும், ஊடக கேமிராக்கள் கலைஞர் வீட்டில் ஆஜர். எப்போது வந்தாலும் சுட்டுத்தள்ளதான் இந்த முனைப்பு.

இந்த திடீர் திருப்பத்தை ஊடகத்தில் முழங்கும் பேச்சாளர்கள் ரசித்ததாக தெரியவில்லை! விவாதங்களில் மட்டும்தான் காச்மூச். இங்கே கப்சிப்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யா விட்டுக் கொடுத்த ஐந்து கோடி!

நல்ல நேரத்தில் பூஜை போட்டாலும், ராகு காலம் புடை சூழதான் வெளிவருகிறது எல்லா படங்களும்! சூப்பர் படமோ? சுமார் படமோ? கட்டையை போடுவதற்கென்றே வருகிற ஒரு கூட்டம்,...

Close