பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பிரச்சாரம்? தொடரும் வற்புறுத்தல்?
பிரபல பத்திரிகையாளரும், பி.ஜே.பி யின் தமிழக அட்வைசருமான ஆடிட்டர் குருமூர்த்தி அடிக்கடி ரஜினியை சந்தித்து வருகிறார். ‘நானும் அவரும் பத்து வருஷமா மீட் பண்ணிக்குறோம். என் நெருங்கிய நண்பர் அவர். இப்பதான் மீடியாவுல பெருசு படுத்துறீங்க’ என்று ரஜினி சமாளித்தாலும், ரஜினியை ஏன் குருமூர்த்தி சந்திக்கிறார் என்ற கேள்வி அரசியலில் சூறாவளியாய் அடிக்கிறது.
ரஜினியை புதிய கட்சி துவங்கச் சொல்லி குருமூர்த்தி வற்புறுத்துவதாகவும், நல்ல நேரத்திற்காக ரஜினி காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒருபுறமிருக்க… வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினியின் பங்கு குறித்துதான் இந்த சந்திப்பை நிகழ்த்தி வருகிறாராம் குருமூர்த்தி.
இந்த தேர்தலில் அதிமுக வுடன் கூட்டு வைத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கும் பி.ஜே.பி, தேர்தல் கூட்டணியில் தனக்கு 20 எம்.பி.தொகுதிகளையும், கூட்டணி கட்சியான அதிமுக வுக்கு 20 தொகுதிகளையும் பிரித்துக் கொள்ளுமாம். இந்த தேர்தல் பிரச்சாரத்தில்தான் ரஜினியை இழுத்துவிட திட்டம் போடுகிறது பி.ஜே.பி. எப்படியிருந்தாலும், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே புதுக்கட்சி பற்றி முடிவெடுப்பாராம் ரஜினி. ஆனால் பிரச்சாரத்திற்கு வரச்சொல்லி ரஜினியை நெருக்குமாம் பி.ஜே.பி.
தற்போதைய நிலவரப்படி, பி.ஜே.பி நிற்கும் 20 தொகுதிகளுக்கு மட்டும் ரஜினி நேரடியாக சென்று பிரச்சாரம் மேற் கொள்வார் என்கிறார்கள். அதிமுக தொகுதிகளுக்குள் நுழையக் கூட அவர் விரும்பவில்லையாம். அதுமட்டுமல்ல… ‘நான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் பி.ஜே.பி மீது இருக்கும் வெறுப்பை மாற்ற வேண்டும். அதற்கு முதல் வேலை, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான். அதை அமைத்துவிட்டு வாருங்கள். நல்ல பதிலை சொல்கிறேன்’ என்கிறாராம்.
யார் யாரோ போராடிக் கொண்டிருந்தாலும், ரஜினி மெரீனாவில் உண்ணாவிரதம் இருப்பார். மறுநாளே காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அறிவிக்கும். அதற்கப்புறம் தமிழகத்தில் பி.ஜே.பி தலைமை மாறும். ரஜினி யை விரும்புகிற மக்கள், அப்படியே பி.ஜே.பி யையும் விரும்புவார்கள் என்பது மத்திய அரசின் கணக்கு.
ஹ்ம்… எல்லா கணக்குக்குமா விடை சரியாக அமைந்துவிடுகிறது?
தமிழ் நட்டு மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது… இதுபோல அலப்பறைகள் அடிக்கடி அரங்கேறும்….
பல வாய்ச் சவடால் வீரர்கள் என்னதான் மேடைக்கு மேடை கூப்பாடு போட்டாலும், அவர்களுக்கு மக்களின் கவனம் கிடைக்காது. ஆனால் ரஜினியின் ரத்தின சுருக்கமான வார்த்தைகள் அனைத்து மக்களின் இதயத்திலும் உடனே சென்று சேர்ந்து விடும். தமிழகத்தில் அந்த சக்தி அவருக்கு மட்டுமே உண்டு. இந்தளவிற்கு வல்லமை படைத்தவரைத்தான் தமிழகம் அரவணைக்க காத்திருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் நாகரிகமான அரசியல் இருக்கும். இன்று தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலருடைய மேடைப் பேச்சு எப்படி இருக்கிறது?. சில கைத்தட்டல்களுக்காக மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்து தன்னைத்தானே தாழ்த்திக் கொள்கிறார்கல் அல்லவா! . பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத வெற்று கூச்சல்கள்தான் அவை. ஆனால் ரஜினியின் மேடை பேச்சு, இதுவரையில் யாரையும் , தாக்கிப்பேசி, காயப்படுத்தி நாம் பார்த்ததில்லை. இனியும் இருக்காது. கண்டிப்பாக அனைத்துத் தலைவரிடமும் நட்பு பாராட்டுவார் தமிழக நலனுக்காக அவர்களிடமும் ஆலோசனை கேட்பார், தான் என்கிற அகங்காரம் அறவே இருக்காது. மூன்று மைல்களுக்கு முன்னரே முதுகை வளைத்துக்கொண்டு நிற்க வேண்டிய அவசியம் கண்டிப்பாக இருக்காது. காலில் விழும் கலாச்சாரம் அடியோடு நிறுத்தப்படும், மிக எளிமையான ஆட்சியை நிச்சயம் ரஜினியால் கொடுக்க முடியும். பக்கத்து மாநிலமான ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா பிரிவினையிலிருந்து மீண்டு வந்து, சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் இன்று பல திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்படுகின்றன. உதாரணத்திற்கு சூரிய சக்தி திட்டத்தில் 1000 வாட்ஸ் மின்சார உற்பத்தி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் இங்கு ஒரு அமைச்சரோ ஆற்றில் தெர்மக்கோல் விட்டு மக்களை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். லஞ்ச ஊழலால் பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. அரசு இயந்திரங்கள் அடியோடு நொறுங்கி போய்விட்டன. இதை சரி செய்ய ஒரு வல்லமை படைத்த ஆட்சியால் மட்டுமே முடியும். அந்த ஆட்சியை ரஜினியால் மட்டுமே முடியும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்.. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது, தமிழன்தான் ஆளவேண்டும் என்கிற வாய்ச் சவடால் வீரர்களுக்கு ஒரு ஒரு கேள்வி, உங்கள் கட்சியில் சுத்தமான தமிழனை தவிர மற்றவர்கள் யாரும் உறுப்பினராக சேரக்கூடாது , அவர்களின் ஓட்டும் தேவையில்லை என்று தடை செய்யத் தயாரா?