ரிசர்வேஷன் ஸ்டார்ட்! கரை தாண்டியது ரஜினி முருகன்

காளை மாடுகளுக்கு கால் கட்டு அவிழும் ‘ஜல்லிக்கட்டு’ நேரம் இது! கிட்டதட்ட ஜல்லிக்கட்டு மீட்புக்கு நிகரான போராட்டத்தை சந்தித்துவிட்டார்கள் ரஜினி முருகன் படக்குழுவினர். பல முறை ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டு வந்த முருகனுக்கு, கூட்டமே கூடி நின்று குலவை போடாத குறையாக காத்திருந்தது. எப்படியோ… தடைகளை உடைத்து தியேட்டரை நோக்கி புறப்பட்டுவிட்டான் ரஜினி முருகன்.

ஆச்சர்யம் என்னவென்றால், சற்றே சத்துக்குறைவான சவலைப் பிள்ளையை மட்டும் தாங்கிக் கொள்கிற தாய் மாதிரி, ரஜினி முருகனுக்கு ஸ்பெஷல் கவனம் கொடுக்கிறார்களாம் தியேட்டர்காரர்களும். பல மாசமா போராடுன படம்ப்பா… ட்ரெய்லரும், பாட்டும் செம ஜோரா இருக்கு. இந்த நேரத்துல அதுக்கு ஹெல்ப் பண்ணுவோம் என்று முடிவெடுத்த தியேட்டர் அதிபர்கள் பெருமளவு தியேட்டர்களை ஒதுக்கிக் கொடுத்து வருகிறார்களாம்.

இந்த படத்தின் ரிலீசுக்காக தான் ரஜினி முருகனுக்காக வாங்கிய சம்பளத்தையும் விட்டுக் கொடுத்து மேலும் கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன். எல்லாரும் கூடி, தேரை முன் பக்கம் தள்ளிவிட்டதால் சொன்ன தேதியில் படம் திரைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் வந்துவிட்டது. அதன் விளைவாக ரஜினி முருகன் ஓடும் தியேட்டர்களில் ரிசர்வேஷன் கவுன்டர்களையும் ஒப்பன் பண்ணியிருக்கிறார்கள்.

இந்த ரஜினி முருகனை அந்த பழனி முருகன் காப்பாத்தட்டும்…

1 Comment
  1. aadhu says

    Siva is good person

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Thaarai Thappattai Movie Stills

Close