ஜெயப்ரதாவுக்கு ரஜினி கொடுத்த கிஃப்ட்!

நடிகை ஜெயப்ரதாவை இப்போது நினைத்தாலும், எபவ் ஃபோர்ட்டி பேரிளைஞர்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்ளும்! இப்போது அவரது மகன் சித்துவே ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார். ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கும் ‘உயிரே உயிரே’ படத்தில் சித்துதான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஹன்சிகா மோத்வானி. படத்தின் பெயர் ‘உயிரே உயிரே’. நேற்று வரைக்கும் அல்லது நாளை அதிகாலை ஒரு மணி வரைக்கும் இந்த படத்தின் இமேஜ் என்னவோ? லிங்காவின் முதல் ஓப்பனிங் ஷோவான விடிகாலை ஒரு மணி ஷோவிலிருந்து இப்படத்தின் அட்ராக்ஷனே வேறு. அது என்ன? அதை தெரிந்து கொள்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழில் வெளிவந்த ‘அவள் ஒரு தொடர் கதை’ தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இங்கு ஜெய்கணேஷ் நடித்த வேடத்தில் அங்கு ரஜினிதான் நடித்தார். அவருக்கு ஜோடி ஜெயப்ரதா. அன்று துவங்கிய நட்பு இன்றுவரை தொடர்கிறதாம் இருவருக்கும். சமீபத்தில் லிங்கா படப்பிடிப்பில் ரஜினியை சந்திக்கப் போனார் ஜெயப்ரதா. கூடவே சித்துவையும் அழைத்துக் கொண்டு. என் மகனை தமிழ்ல லாஞ்ச் பண்றேன். அவனை ஆசிர்வதிக்கணும் என்று கேட்டுக் கொண்டாராம் ஜெயப்ரதா.

இரு கைகளாலும் ஆசிர்வதித்த ரஜினி, அதற்கப்புறம் தந்ததுதான் இன்ப அதிர்ச்சி. படம் ரெடியாகிட்டா ஒரு ட்ரெய்லர் ரெடி பண்ணிக் கொடு. நம்ம லிங்கா படத்தோட இணைச்சு தியேட்டர்ல போட சொல்லலாம் என்றாராம். நெக்குருகிப்போய்விட்டார் ஜெயப்ரதா. ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த கன்னட படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்திருக்கிறாராம் ஜெயப்ரதா. அப்புறம் என்ன? அவரும் பச்சைக்கொடி காட்ட,

நாளையிலிருந்து லிங்கா படத்துடன் ‘உயிரே உயிரே’ ட்ரெய்லர் இணைப்பு!

Read previous post:
மணிரத்னம், கமல் ஆசைப்பட்டது இப்போது 2டி யில்!

மணிரத்னம் முயன்று, கமல் ஆசைப்பட்டு, தனியார் தொலைக்காட்சிகளான சிலவற்றின் நாக்கில் எச்சில் ஊற வைத்து... இப்படி ஒருவருக்கும் சிக்காமல் ஓட்டம் காட்டிய கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதை,...

Close