‘ஓம் நமச்சிவாய!’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்!
இதை புத்தாண்டு ஸ்பெஷலாக வைத்துக் கொள்ளுங்களேன்…
லிங்கா படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்! ரஜினிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார் சரவணன். பிரபல மேக்கப் மேன் பானுவின் உதவியாளர் இவர். கோடிக்கணக்கான ரசிகர்களை கும்பிட வைக்கிற முகம். எவ்வளவு பயபக்தியோடும் பணிவோடும் நடக்க வேண்டும் அது? அப்படிதான் நடந்தது. ஆனால் மேக்கப் போடுகிற சமயத்தில் அவருக்கு ஒரு போன் வர, அதை எடுப்பதா? வேண்டாமா? பெரும் குழப்பத்தோடு தவித்த சரவணனிடம், “போனை எடுத்துப் பேசுங்க” என்கிறார் ரஜினி. நம்பரை பார்த்த சரவணன், “இல்ல சார். அவ்வளவு முக்கியமில்லாத கால். நான் அப்புறம் பேசிக்கிறேன்” என்று மேக்கப்பை தொடர்கிறார்.
கட்…
ஷாட் இடைவெளியில் சரவணனை வறுத்தெடுக்கிறார்கள் ரஜினியின் பிற பணியாளர்கள். “ஏன்யா… சாருக்கு மேக்கப் போடுற நேரத்துல செல்லை ஆப் பண்ணி வைக்க மாட்டியா?” என்பதுதான் அவர்களின் சண்டை. இல்லங்க. என்னோட மனைவி கர்ப்பமா இருக்காங்க. இது டெலிவரி டைம். எந்த நேரத்திலேயும் போன் வரலாம். அந்த ஒரு காரணத்துக்காகதான் நான் போனை ஆன் பண்ணி வச்சேன். இல்லேன்னா வச்சுருக்க மாட்டேன். சரவணன் சொல்வதை காதில் வாங்கிக் கொண்டே கிராஸ் பண்ணிய ரஜினி, சட்டென நின்று “இவங்க கேட்கிறாங்கன்னு நீ ஒண்ணும் பீல் பண்ணாத. குடும்பம்தான் முக்கியம். மற்றதெல்லாம் பிறகுதான். இந்த விஷயத்துல நானே உன்னை ஒண்ணும் சொல்லல. என்று கூறியவர், எந்த ஆஸ்பிடல்ல காட்றே என்றெல்லாம் அக்கறையாய் விசாரிக்கிறார்.
லிங்கா முடிந்தது. அதற்கப்புறம் ரஜினியை சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை சரவணனுக்கு. ஷுட்டிங் இல்லாத ஒரு நாளில் எங்கோ ரஜினியின் கண்களில் பட்டார் இவர். எப்டியிருக்கே? குழந்தை நல்லாயிருக்கா என்று விசாரித்த ரஜினி, ஆமாம்… குழந்தைக்கு என்ன பெயர் வச்சுருக்கே என்கிறார்.
“லிங்கான்னு வச்சுருக்கேன் சார். உங்க பேரைதான் வைக்கணும்னு நினைச்சேன். ஆனால் நான் ஏதோ உங்களை இம்ப்ரஸ் பண்றதுக்காக வச்சதா மற்றவங்க பேசுவாங்க. அதுக்காகதான் லிங்கான்னு வச்சுருக்கேன்” என்று சொல்ல, ரஜினி சொன்ன பதில்தான் கிரேட்.
ஓம் நமச்சிவாய…!
ஆமா… டைட்டில்ல அஜீத்துன்னு வந்திருக்கே? ஆனால் அவரை பற்றி ஒரு வரி கூட இங்கில்லையே?
அது என்ன என்று நாளைக்கு சொல்வோம்ல? அதுவரைக்கும் ப்ளீஸ் வெயிட்!
LONG LIVE OUR EVER GREEN SUPER STAR RAJINIKANTH
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்கவே