ரஜினி அனுப்புன அந்த சொப்பன சுந்தரி இப்ப யாருகிட்ட இருக்கா?

கூரையில சோறு போட்டா ஆயிரம் காக்கா என்கிற பழமொழிக்கெல்லாம் இப்போதுதான் அர்த்தம் தெரியவருகிறது. ரஜினியிடம் பெறப்பட்ட பனிரெண்டரை கோடியை கூரையில் எறிந்துவிட்டு ஆயிரம் காக்காய்கள் அதை சுற்றி சுற்றி வட்டமடிக்க, உருப்படியாக ஒரு பருக்கையும் சிக்கவில்லை எந்த காக்காவுக்கும். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் நீங்களே பிரிச்சுங்கங்க என்று கூறியிருப்பார் போலும் ரஜினி.

லிங்கா விவகாரத்தில் சிங்காரவேலன் தலைமையிலானவர்கள் தொடர் போராட்டம் நடத்தி ரஜினியை பணிய வைத்தார்கள். அப்போது பெறப்பட்ட தொகைதான் இந்த பனிரெண்டரை கோடி. இதில் ஐந்தரை கோடியை மட்டும் சிலருக்கு பிரித்துக் கொடுத்துவிட்டார்கள். மீதி பணம் எங்கு போச்சு என்பதே யாருக்கும் தெரியவில்லை. இவர்ட்ட இருக்கு, அவர்ட்ட இருக்கு என்கிறார்களே ஒழிய, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வந்து சேரவில்லை. பணத்தை மொத்தமாக வைத்துக் கொண்டு தரமாட்டேன் என்கிறார் என்று இவர்கள் கையை காட்டுவது பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியனை நோக்கி. பொறுத்து பொறுத்து பார்த்த விநியோகஸ்தர்கள் இன்று மாலை பிரஸ்மீட்டை கூட்டிவிட்டார்கள்.

இதில் இருபது நிமிடம் ஓடக்கூடிய ஒரு வீடியோ கிளிப்பிங்ஸ் திரையிடப்பட இருக்கிறதாம். அந்த வீடியோ பதிவுக்கு இவர்கள் வைத்திருக்கும் தலைப்பு, ‘ரஜினி அனுப்புன அந்த சொப்பன சுந்தரி யாருகிட்ட இருக்கா?’ லிங்கா விஷயத்தில் பஞ்சாயத்து பேசும் பல விஐபிகளின் பேச்சை அப்படியே ஒளிபரப்பி அதற்கு பொருத்தமாக வடிவேலு, செந்தில், கவுண்டமணியின் டயலாக்குகளை இடையிடையே ஒளிபரப்புவார்களாம். விழுந்துவிழுந்து சிரிக்க வைத்தாலும் அதற்குள்ளிருக்கும் உண்மை புரிந்து எங்கள் பணத்தை எங்களிடம் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்களாம் அப்போது.

இந்த பிரஸ்மீட்டில், விநியோகஸ்தர் சிங்காரவேலன், ரோகினி பன்னீர் செல்வம், தயாரிப்பாளர் மன்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். இங்கு வைக்கப்படவிருக்கிற இன்னொரு முக்கியமான விவாதம் ஒன்று இருக்கிறது. அது?

‘முதல்ல இந்த பனிரெண்டரையை வாங்கிக்கங்க. வேந்தர் மூவிஸ் மற்றும் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு படம் தயாரிங்க. அதில் நான் நடிச்சுக் கொடுக்குறேன். அதில் கிடைக்கிற லாபம் 25 கோடியை நீங்களே பிரிச்சுக்கங்க’ என்று வாய்மொழி உத்தரவாதம் கொடுத்திருந்தாராம் ரஜினி. அந்த கால்ஷீட் எப்போ கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்புவார்களாம். ஒருவேளை ரஜினி கால்ஷீட் தராத பட்சத்தில் அவருக்கு ரெட் போடப்படும் என்றும் அச்சுறுத்துவார்களாம்.

மிச்ச பணம் ஆறரை கோடியை கூட உங்களால் உருப்படியா சண்டையில்லாம பிரிச்சுக்க முடியல. இதுல ரஜினி கால்ஷீட் வாங்கி படமெடுத்து அதில் வர்ற லாபத்தை பிரிச்சுப்பாங்களாம்! உடம்புல இருக்கிற ஒன்பது துவாரத்தாலேயும் சிரிச்சா கூட, இந்த ஜோக் அடங்காது போலிருக்கே!

7 Comments
  1. Tamil Kumaran says

    Extract of The Hindu paper – dated 24th May 2015

    Last year, Rajinikanth’s Lingaa fetched Rs. 21 crore, the highest ever for a Tamil film in the overseas markets. And in the first five months of 2015, four films have done extraordinary business – Shankar’s I, Mani Ratnam’s O Kadhal Kanmani, Raghava Lawrence’s Kanchana-2, and Ajith’s Yennai Arindhaal

    Ram Muthu, the Managing Director of Atmus Entertainment, a leading US-based distributor of Tamil films, says: “The USA market is becoming bigger by the year and can do $1.5 million — $2 million business. But that kind of business happens only for Rajinikanth films. USA audiences like Rajinikanth films the most, followed by films from Shankar, Mani Ratnam and Kamal Hassan. Kamal’s Uttama Villain, a failure in India, did $585,000 in the US market. These four people can bring more than $500,000 in revenue. The highest for Vijay, Ajith and Suriya were all under $400,000. Now, Vijay has Kaththi at $620,000, Ajith hasYennai Arindhaal at $515,000
    – See more at: http://www.rajinifans.com/detailview.php?title=1506#sthash.XF2XzwRG.dpuf

  2. தமிழ்ச்செல்வன் says

    Lingaa Box Office Collections :

    Lingaa has huge social media buzz which helps to earn great collections if the movie receive the positive reports in the first daay of it’s release. If the movie reviews are good then it is expected to beat the record collections of Endhiran and Kaththi at the Tamil Nadu Box office.

    Endhiran has a record of 11 crore collections on its first day of the release where kaththi broken the record with its 12.5 Crore Approximately on it’s first day. So, With this Vijay’s Kathi is currently the Highest Grossing Tamil Film in 2014. But Considering the craze and following of the Rajini if the film able to get the positive review and good response from the audience then it can easily surpass the record of the Kaththi in the race of First day Box office collections.

  3. ELUMALAI says

    அசிங்கப்பட்டாண்டா இந்த அசின்காரவேலன். நாயா செருப்பால அடித்து துரத்த வேண்டும். சிங்காரவேலன் ஒழிக. ஏமாற்று பேர்வழி அசிங்கார வேலன் ஒழிக.

  4. இளமாறன் says

    வழிப்பறி, பகல் கொள்ளை போன்ற வார்த்தைகளையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது இந்த ‘லிங்கா நஷ்ட ஈடு’ என்ற வார்த்தை! ‘ரஜினி யாருக்கு கால்ஷீட் தர வேண்டும், யார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் நிர்பந்திக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுவும் எழுத்துப் பூர்வ ஒப்பந்தமே இல்லாத நிலையில், அவரை நேரில் கூடப் பார்த்திராத இந்த கூட்டம் அவருக்கு நெருக்கடி தருவது சட்டவிரோதமல்லவா… ரஜினி நினைத்தால் இந்த கூட்டம் மொத்தமும் கம்பி எண்ண வேண்டி வரும். ஆனால் அவர் என்றைக்குமே அந்த தீவிர நடவடிக்கையை எடுக்க நினைப்பதில்லை.. அவரது கருணை மனசை காசாக்கப் பார்க்கிறார்கள்,” என்கிறார் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் ஒருவர். இத்தனைக்கும் லிங்கா பிரச்சினை முடிந்துவிட்டது.. இனி எந்தப் பிரச்சினையும் செய்ய மாட்டோம் என்று ஒப்பந்தம் போட்டு, அதை கலைப்புலி தாணு கையால் பெற்றுக் கொண்டு, போட்டோவுக்கும் போஸ் கொடுத்த சிங்காரவேலன் என்ற நபர், மீண்டும் மீண்டும் இந்த லிங்கா பிரச்சினையைக் கிளப்புவது திட்டமிட்ட திருட்டுத்தனம் என்கிறார்கள் அவருடன் இருக்கும் சக விநியோகஸ்தர்களில் சிலர். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், ஃபெப்சி என வலுவான அமைப்புகளைக் கொண்ட தமிழ் சினிமா, இந்த மாதிரி ப்ளாக்மெயில் வர்த்தகத்தை எப்படி மவுனமாக வேடிக்கைப் பார்க்கிறது? என அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

  5. SHEELA RUFUS says

    எந்த கொம்பனும் என் இறைவன் என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு நிர்பந்தம் கொடுக்க முடியாது. இந்த மோசடி பேர்வழி அசிங்காரவேலன் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

  6. SHEELA RUFUS says

    Share it maximum to show that this RAJINI is a
    waste person
    ரஜினி சுத்த வேஸ்ட் ..
    எல்லாரும் சம்பாதித்த பணத்தை
    வாரி வரி அள்ளி அள்ளி
    கொடுக்குரார்கள். சசிகலா
    குடும்பம், கலைஞர் குடும்பம், மூப்பனாகுடும்பம்,
    வைகுண்டராஜன் குடும்பம், சிமன்ட்
    சீனிவாசன் குடும்பம், ராமதாஸ் அய்யா
    குடும்பம், கே.என் நேரு குடும்பம், பி.ஆ.பி குடும்பம்,
    கல நிதி மாறன் குடும்பம், பசிதம்பரம்
    குடும்பம், இவர்கள் எல்லாம்
    ரொம்ப நல்லவர்கள் சினிமா நடிகள்
    ரஜினி மட்டுமே மோசமானவர்
    காரணம்
    படையப்பா வெள்ளிவிழாவில் தனது
    சொத்துக்களில் பெரும் பகுதியை
    மக்களுக்கு உயில் எழுதி வைத்தாரே…
    தனது படங்களில் சாதி மத
    பிரசினைகளை தூண்ட வில்லை..
    கார்பரேட் பொருட்ட்களின் விளம்பர
    படங்களில் நடிப்பதில்லை…
    பொது இடங்களில் மேக்கப்
    இல்லாமல்
    வந்து விடுகிறார் பார்க்க சகிக்கல…
    தமிழகதில் முக்கிய மான
    விவகாரங்களில் மக்கள் பக்கம்
    ஆதரவளிக்கிறார்….
    ஈழ விவாகாரத்தில் ஈழத்தை அடைந்தே ஆகனும்
    என்றார்…
    ஒகெனக்களில் கருனாடக மிக
    முக்கியமான தலைவர்களின் பெயரை
    சொல்லியே எலெக்சனுக்காக
    ஆட்டம் போடாதீங்கன்னு
    சொன்னார்,…
    பிறர் படங்களுக்கு பிரமோட் செய்கிறார்,..
    தனது படம் நஷ்டத்திற்கு
    பணம் திரும்பக் கொடுக்கிரார்,…
    கோவை குண்டு வெடிப்பு சமயங்களில்
    இவர் சிறுபான்மை மக்களுக்கு
    ஆதரவாக பேசி வசமாக சிக்கி ரஜினிக்கு
    தீவிரவாதிகளுடன் தொடர்பு என
    சர்ச்சையை எழுப்பினர்…
    இவர் எம்பிய எம் எல் ஏ வா இவர் ஏன்
    இப்படி மோசமானராக நடக்கிறார்
    ரஜினி போன் போட்டு காவிரிக்கு தண்ணி குடுக்க
    கூடாதுன்னு சொல்வாரோ
    பாலாறு பிரச்சினை திர்க்கமாட்டுராரே ரஜினி
    முல்லை பெரியார் பிரச்சனைய பேசிமுடிக்க
    மட்டுராரே,
    கட்ச தீவயாவது மீட்டு கொடுக்க
    மாட்டுராருங்க இந்த நடிகர் ரஜினி
    ரஜினி சுத்த வேஸ்ட் , காவெரில
    தண்ணி விடமாட்டுராரு,
    இலங்கைக்கு போயி ராஜ பக்ஷே
    கழுத்த சீவமாட்டுராரு, முல்லை
    பெரியாறு பிரச்சனைய
    மம்முட்டியோடு ஒக்கந்து பேசி
    முடிக்க மட்டுரார்,
    நிலத்த நீர் பற்றி கவலை
    படமாட்டுராரு, எல் நினோ பற்றி
    மக்களுக்கு புரியவைக்க
    மாட்டுராரு, மதுக்கடை டாஸ்மார்க்
    நிறைய பெருகிட்டு ரஜினி தான்
    இதுக்கு காரணம்,
    ரோட்ல பைக் ஆக்சிடென்ட்
    ஆகிட்டு ரஜினி கம்முன்னு
    இருக்கார்
    தமிழ் நாட்டுல 144 போட்டதே
    தப்புங்க ரஜினி சுத்த வேஸ்ட்
    காலையிலே முதல் ஆளா ஓட்டு
    போட்டுட்டார் கியூவிலயே
    நிக்க மட்டுரார்
    கலைஞருக்கு மூனு பொண்ண்டாட்டி
    எம்ஜியாருக்கு ரெண்டு
    பொண்டாட்டிங்க, ரஜினி
    ரொம்ப
    மோசமுங்க
    கமல் கவுதமியோட வாராருங்க,
    ரஜினி மட்டமான ஆளுங்க,
    தினதந்தி பேப்பர் அளுங்கட்சிக்கு
    சாதகமாகவும், தினமலர் மோடிக்கு
    ஆதராவாகவும் செய்தி போடுராங்க,
    ரஜினி இதைக்கூட தட்டி கேக்க
    மாட்டுராருங்க
    நேரு சிக்ரெட் பிடிப்பார்,
    ணேதாஜி சிக்ரெட் புடிப்பார்,
    சேகுவாரா சுருட்டு எப்போதுமே
    புகைப்பர். சி.என். அண்ணாதுரை
    பார்லிமென்ட்டாக இருந்தாலும், ஐ
    நா சாபையாக இருந்தாலும் மூக்கு
    பொடி பொட்டுட்டார்ன்ன
    ா என்னமா ஆக்ரோஷமா பேசுவாரு
    தெரியுமா?
    மூப்பனார் பாக்கு போடாம இருக்க
    மாட்டாராமே..
    இதெல்லாம் கெடக்கட்டும்
    தமிழர்கள் சிக்ரெட் பழக்கம்
    ஏற்பட ரஜினி மட்டும்தான் காரணமுங்க
    தளபதி ஹாங்காங் போயிட்டார்,
    அம்மா கொட நாடு போயிட்டாங்க,
    இங்க உள்ள பிரச்சினைய தீர்க்கிறது
    யாரு , ரஜினி என்னதான் நினைச்சுட்டு
    இருக்காரு,
    ரஜினி அரசியலுக்குதான் வரமாட்டுராரு,
    சட்டமன்றத்துகாவது போகலாம்ல அங்கயும்
    போகமாட்டுராரு…. ரஜினி வயசு பொண்ணுக கூட ஆடுனா வெவஸ்தை கெட்ட மனுசனாம்,கமல் இந்த் வயசுலையும் ஈரோயின் உதட்ட கடிச்சா கதைக்கு தேவைப்படுதான்

  7. Gopal says

    சிங்காரவேலன் குழுவினருக்கு விநியோக உரிமை கொடுத்தால் அவ்வளவு தான் – கொதிக்கும் திரையுலகம்
    லிங்கா, கங்காரு, புறம்போக்கு என்ற பொதுவுடமை என்று விநியோக உரிமை பெறும் எல்லாத் திரைப்படங்களிலும் நஷ்டக் கணக்கு காண்பித்து பிரச்னை கிளப்பி வருகிறார்கள் சிங்காரவேலன் தரப்பினர்.

    “எல்லா வியாபாரங்களிலும் லாப நஷ்டம் சகஜம். திரைத்துறையைப் பொறுத்தவரையில் லாபம் எவ்வளவு அதிகமோ, அவ்வளவு நஷ்டமும் இருக்கும். காலம் காலமாக இந்தத் துறையில் ஈடுபட்டு வரும் பலரும் நஷ்டம் வரும் போதெல்லாம் சுமுகமாகப் பேசித் தீர்த்து வரும்நிலையில், சிங்காரவேலன் குழுவினர் போட்ட காசுக்கு ஒரே வாரத்தில் பல மடங்கு லாபத்தை எதிர்பார்த்து, அது வந்தாலும், வராவிட்டாலும் நஷ்டக் கணக்கைக் காண்பித்து பிரச்னை செய்து வருகிறார்கள். லேட்டஸ்டாக ‘புறம்போக்கு என்ற பொதுவுடமை’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் என்று நடத்தப்பட்டது. சமீப காலமாக திரைப்படங்கள் தயாரித்து வெளிவருவதே சிரமமான சூழலில் இந்த மாதிரியான ‘சக்சஸ் மீட்’டுகள் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை பார்க்க மக்களை மேலும் கவர்ந்திழுக்கும். புறம்போக்கு என்ற பொதுவுடமை ஊடகங்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் இந்தப் படத்தின் சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்களான சிங்காரவேலன் குழுவினர் ‘எங்களுக்கு நஷ்டம். இதில் UTV தயாரிப்பு நிறுவனம் சக்சஸ் மீட் நடத்தியது சரியல்ல” என்ற ரீதியில் அறிக்கை விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, இவர்களின் தொடர் நடவடிக்கைகள் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு திட்டத்துடன் திரைத்துறையில் நுழைந்து பிரச்னைகளைக் கிளப்பி திரைத்துறையைக் கைப்பற்றி யாருக்கோ ஜால்ரா அடிக்கும் நடவடிக்கைகள் இது. இனிமேலும் இந்தக் குழுவினருக்கு யாரும் விநியோக உரிமை கொடுத்தால் என்னவாகும் என்பதை வரிசையாக ஆராய்ந்து பார்ப்பது நல்லது” என்கிறார்கள் திரைத்துறையினர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிங்கப்பூர்ல சிங்கிள் டிராக்! ரஜினி, கமல், விஜய், சூர்யா வரிசையில் நெக்ஸ்ட் ஸ்டெப் வைக்கும் சிவகார்த்திகேயன்!

‘யாரும் தடுக்க முடியாது. சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திட்டமிட்டபடி வெளியே வரும்’ என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படு ஸ்டிராங்காக கூறிக் கொண்டிருக்கிறது. அதை நிரூபிப்பது போல...

Close