அப்ப சொர்ணமால்யா இப்ப ரம்யா…! மணிரத்னம் முடிவு

‘யாரோ யாரோடி உன்னோட புருஷன்…. யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்’ என்று சின்னத்திரை சொர்ணமால்யாவை வியந்து திரைக்கு கூட்டி வந்தவர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் சொர்ணமால்யாவின் அழகை அதே சொர்ணமால்யா நினைத்தாலும் இப்போது திரும்ப பெற முடியாது. அதற்கப்புறம் பல படங்களில் நடித்து ஃபேட் அவுட்டாகி தற்போது தனக்கு முதன் முதலில் அடையாளம் கொடுத்த சின்னத்திரைக்கே வந்துவிட்டார் சொர்ணா. நெக்ஸ்ட்?

முன்பெல்லாம் முக்கியமான விழாக்கள் என்றால் அது தொகுப்பாளினி ரம்யா இல்லாமல் நடக்காது. தழைய தழைய புடவை கட்டி, தலை நிறைய மல்லிகை பூவுடன் அவர் மைக்கை பிடித்தால், நிகழ்ச்சிக்கு குத்துவிளக்கே தேவையில்லை. அவரே ஒரு மங்களகரமான மூடுடன் நிகழ்ச்சியை துவங்கி வைப்பார். பேச வரும் விவிஐபிகளும் தொகுப்பாளிதானே என்கிற அலட்சியம் காட்டாமல் ரம்யாவுக்கும் சேர்த்து சில வார்த்தைகள் பேசிவிட்டு இறங்குவார்கள். கொஞ்ச நாட்களாக எல்லாமே மிஸ்சிங். ஏன்? ஏன்? ஏன்?

அவர் சினிமாவில் நடிக்கப் போய்விட்டார். சொர்ணமால்யாவை தொடர்ந்து மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகையை தேடி வந்த மணிரத்னம் தனது புதிய படத்தில் ரம்யாவை நடிக்க வைத்திருக்கிறாராம். அவர் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எவராக இருந்தாலும் பல்க் ஆக தேதியை கொடுத்திருக்க வேண்டும். அவர் எப்போது கேமிரா முன் நிற்க அழைக்கிறாரோ, அதற்கு தயாராக இருக்க வேண்டும். அந்த கடமைக்காக தன் வெகு கால கடமையான தொகுப்பாளினி வேலையை கொஞ்ச நாட்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார் ரம்யா.

மேடை வெளிச்சத்துல ஒட்டடை படியுது… உடனே வாங்க ரம்யா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஏற்கனவே வம்பு… மறுபடியும் எதுக்குப்பா மீனாவ இழுக்கறீங்க? சரத்குமார் பதிலால் ‘சண்டமாருதம் ’ திகைப்பு

அட... இதென்னடா அசுரப் பாய்ச்சலாக இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட வைத்தார் சரத்குமார். ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே நேரத்தில் மூன்று படங்களின் துவக்க விழாவுடன், தனது ‘சண்டமாருதம்’ படத்தின்...

Close