தீரன் அதிகாரம் ஒன்று படம் போல் நிஜ சம்பவம்! ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக போலீஸ்!
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்த பொதுமக்கள் மிரண்டு போனது கூட அதிசயமில்லை. ஆனால் போலீசே கூட மிரண்டு போனார்கள். பல போலீஸ் அதிகாரிகளும், கான்ஸ்டபிள்களும் அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத், மற்றும் ஹீரோ கார்த்தியின் தொலைபேசி எண்களை வாங்கி தேடி தேடி பேசியதை சினிமாவுலகம் அறியும்.
போலீஸ் அதிகாரி ஜாங்கிட் வாழ்வில் நடந்த நிஜ சம்பவம்தான் அந்தப்படம். கொடுமை என்னவென்றால் தீரன் படம் திரைக்கு சில வாரங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அதே ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இன்னொரு அதிகாரி உடம்பில் குண்டு பாய்ந்த நிலையில் ராஜஸ்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நெஞ்சையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெரிய பாண்டியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்திலேயே இப்படியொரு துயர சம்பவம் நிகழ்ந்துவிட்டது பெரிய பாண்டிக்கும் அவரது குடும்பத்தினருக்கும்.
நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் இருவரை பிடிப்பதற்காகதான் நான்கு காவலர்களுடன் சென்றாராம் பெரிய பாண்டி.
மறுபடியும் தீரன் அதிகாரம் படம்தான் மனதில் ஓடுகிறது. இந்த கொடூர கொள்ளையர்களை பூண்டோடு அழிக்கும் நேரமிது.
சுட்டுத்தள்ளுங்க சார் அவ்ளோ நாய்களையும்…