மூக்கு வேர்க்கும் ரிலையன்ஸ்! கை மாறுகிறதா ஐ?
கொளுத்துற சித்திரை வெயிலில் கோன்னு அழுகிறது ஒரு செட். அதுவும் குளுகுளு எமி ஜாக்சன் நடிக்க வேண்டிய செட். ஐ படத்திற்காக பிரசாத் லேபில் போடப்பட்ட அந்த செட், கடந்த பல வாரங்களாக பிரிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. இங்கு ஒரு பாடல் காட்சி நடந்து கொண்டிருக்கும் போதே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார் ஹீரோயின் எமி. அவருக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்கிறது எமி தரப்பு.
அவரை திரும்பவும் அழைத்து வந்து படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்று தவியாய் தவிக்கும் டைரக்டர் ஷங்கருக்கு, உரிய பதில்கள் எதுவும் தரப்படவில்லையாம். இப்படி கோடிக்கணக்குல போட்ட செட், அப்படியே கிடப்பது கூட பிரச்சனையல்ல. ஒரு கட்டத்திற்கு மேல் அது தாங்காது என்பதுதான் பிரச்சனை. மறுபடியும் செட் போட வேண்டும் என்றால், அதுவும் பல லட்ச ரூபாய் இம்சையாச்சே?
இதையெல்லாம் கருத்தில் கொண்ட ஷங்கர், ‘உங்களால முடியலேன்னா படத்தை கைமாற்றி விட்டுவிட வேண்டியதுதானே?’ என்று தயாரிப்பாளரை வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் படம் கைமாறுகிறதாம். அநேகமாக ஷங்கரின் ஐ ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கை மாறும் போல தெரிகிறது. கோடம்பாக்கத்தில் கூடி கூடி விவாதிக்கப்படும் இந்த விஷயம் இன்னும் இரண்டொரு நாளில் ஊர்ஜிதப்படுத்தப்படலாம்.