பராசக்தி பாட்டுக்கு ரீமிக்ஸ்! நடையாய் நடந்த இசையமைப்பாளர்!
இன்று திரைக்கு வந்திருக்கும் ‘வந்தா மல’ படத்தின் இசையமைப்பாளர் சாம் டி. ராஜ், இசையை கட்டி மலையை இழுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முன்பு இரண்டு படங்களுக்கு அவர் இசையமைத்திருந்தாலும், இரண்டுமே ‘வருமா, வராதா?’ லிஸ்டில் இருக்கிறது. இந்த நேரத்தில் நம்மை அப்படியே புரட்டிப் போடுற ஆர்வத்தோடு இசையமைக்கிற ஒருத்தர் கிடைச்சா அவர்தான் நம்ம படத்துக்கு மியூசிக் என்று தேடி வந்திருக்கிறார் வந்தா மல படத்தின் இயக்குனர் இகோர்.
அவர் தேடிய ஏழாவது நபர்தான் நம்ம சாம். டி.ராஜ். ‘இதுதான் சுச்சுவேஷன். இதுக்கு நீங்களே ஒரு ட்யூன் பண்ணிட்டு கூப்பிடுங்க. புடிச்சிருந்தா நாம கன்டடினியூ பண்ணலாம்’ என்றாராம் இகோர். காலையில் சுச்சுவேஷன் சொல்லிவிட்டு போனவரை, ஈவினிங்குக்குள் மடக்கிப் போட்டுவிட்டது சாம் டி ராஜின் இசை. ‘ஆஹா… நான் தேடிக்கிட்டு இருந்த ஆள் நீங்கதான்’ என்று புல்லரித்துவிட்டாராம் இகோர். அவர் நினைத்த மாதிரியே பாடல் காட்சிகளுக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.
முக்கியமாக தேசம் ஞானம் கல்வி என்ற பாடலை சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி படத்திலிருந்து ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள். கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான படம். சிவாஜிகணேசனின் முதல் படம். ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த படம். சொல்லாம கொள்ளாம சுளையா எடுத்துர முடியாதே? முறையா பர்மிஷன் வாங்கி ரெக்கார்டிங் செய்வதற்குள் ஒரு மாதம் சோறு தண்ணியில்லாமல் அலைய வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டாராம் சாம். இருந்தாலும், சவால்னா அதுல ஜெயிச்சு காட்றதுதானே நல்லது? ஒரு வழியாக பாடலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கியதும் பின்னி பிடலெடுத்துவிட்டார்.
தியேட்டரில் இந்த பாடலுக்கு தனி அப்ளாஸ் கிடைத்து வருவதால் சாம் முகத்தில் சந்தோஷ ரேகை! படத்தில் வரும் இன்னொரு பாடலான உன்னான்ட காதல நான் சொன்னபோது… என்றொரு பாடல். அதற்கும் துள்ளிக்குதிக்கிறது தியேட்டர்.
திரைக்கு வந்திருக்கும் வந்தா மல, சாம் டி. ராஜுக்கு முதல் படம்! பக்கா ஸ்லம் கதை என்றாலும், இவர் துபாயில் உள்ள ஏழு நட்சத்திர ஓட்டலில் பியானோ வாசித்து வந்த இங்கிலீஷ் தொரை! நடை உடை பாவனை எல்லாம் அப்படியேதான் இருக்கிறது. எப்படிங்க இப்படியெல்லாம் என்றால், இசையமைக்கும் முன்பு நானும் ஸ்லம்முக்கு போய் பாஷையை உள் வாங்கிகிட்டேன் என்றார்.
தமிழ்சினிமாவே… அப்படியே சாம் டி ராஜையும் உனக்குள் வாங்கிக்கோ!
Desam Gnanam | Vandha Mala (2015)
https://www.youtube.com/watch?
Exclusive – Unnande Kadhalena – Vandha Mala Song
https://www.youtube.com/watch?
Vandha Mala – Official Trailer
https://www.youtube.com/watch?
Vandha Mala – Official Jukebox | Sam D Raj | Igore
https://www.youtube.com/watch?