தேசிய விருதுக்கு இப்பவே ரிசர்வேஷன்! ஐஸ்வர்யா தனுஷ் அதிரடி!

எலி எதுக்கு எட்டு முழம் வேட்டி கட்டணும்? புலி எதுக்கு புளி சாதம் திங்கணும்? இதுதான் இப்போதைய கேள்வி. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கும் ரஜினிக்கும் இருக்கிற உறவு கும்மிருட்டுல கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு பார்த்தாலும் தெரிகிற உறவுதான்! மோடியே வீட்டுக்கு வந்து சவுக்யமா என்று கேட்டுவிட்டு போகும்போது, வெங்கய்யா நாயுடு வந்திருக்க மாட்டாரா? அப்போதெல்லாம் அவரிடம் வேண்டுகோள் வைக்காத ஐஸ்வர்யா தனுஷ் இப்போது ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஒருவகையில் அது வரவேற்கப்பட வேண்டிய நல்ல விஷயம்தான். பட்…?

முதலில் வேண்டுகோள் என்னய்யா? அதைச்சொல்லு…

இந்திய திரைப்படங்களில் எது எதற்காகவோ தேசிய விருது கொடுக்கும் மத்திய அரசு, ஏன் ஸ்டன்ட் கலைஞர்களுக்கு மட்டும் தருவதில்லை? திடீரென ஐஸ்வர்யாவின் எண்ணத்தில் இப்படியொரு கேள்வி ஓட, அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. உடனடியாக இதற்கு ஏதாவது ஆவணம் செய்தாக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு முன் அவர் ஒரு படமும் எடுத்து வருகிறார். அது ஸ்டன்ட் கலைஞர்களை பற்றிய ஆவணப்படம். அப்போது அவர் சந்தித்த ஸ்டன்ட் கலைஞர்களையும். அவர்களது கஷ்ட நஷ்டங்களையும் கேட்டு அவர் அதிர்ந்து போயிருக்கலாம்.

சமீபத்தில் சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம், “ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது கொடுங்க” என்று கூறி ஒரு மனு கொடுத்துவிட்டார். ரஜினியின் மகளே சொன்ன பின், அதை பரிசீலிக்காமல் இருக்க முடியுமா?

ஆமா… ஐஸ்வர்யா எடுக்கிற ‘சினிமா வீரன்’ படத்தில் ஸ்டன்ட் வீரர்கள் நடிக்கிறாங்கல்ல?

To listen audio click below :-0

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘Maaveeran Kittu’ Movie Teaser Launch Stills Gallery

Close