பெற்ற மகன்களையே ‘அவர்… இவர்…’ விஐபி அப்பாக்களின் வறட்டு மரியாதை
சொந்த மகனையே அவர் ஹீரோவாக இருந்தால் ‘அவர் ’, ‘இவர் ’என்று குறிப்பிடுகிற வழக்கம் எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், சிவகுமார் போன்றவர்கள் அப்படிதான் அழைக்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை. அதிலும் எஸ்.ஏ.சி தன் மகனை ‘அவர்’ என்பதையும் தாண்டி ‘இளைய தளபதி’ என்றுதான் குறிப்பிடுகிறார். அண்மையில் கவிப்பேரரசு வைரமுத்து கூட ஒரு மேடையில் தன் மகன் மதன் கார்க்கியை ‘அவர் இவர் ’ என்றே குறிப்பிட்டார்.
விஜய், சூர்யா, கார்த்தி, ஜீவா போன்றவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்களோ தெரியாது. இந்த வறட்டு மரியாதை கோடம்பாக்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச உண்மைக்கும் கோடாலி வெட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
செயற்கை நாகரீகம் இப்படி சொந்த பிள்ளைகளையே ‘மரியாதையாக’ பார்க்க வைப்பதை சற்று கவலையோடுதான் கவனிக்க வேண்டியிருக்கிறது. இப்படியெல்லாம் பவுடர் பூச தெரியாதவர் பாரதிராஜா. மதுரையில் நடந்த விழா ஒன்றில் இளையராஜாவை வழக்கம் போல ‘அவன் இவன்’ என்று குறிப்பிட, அன்றிலிருந்து அந்த நட்பே காலாவதியாகிவிட்டது. இப்போது வைரமுத்துவையும் அவர் அப்படியே அழைக்க, அந்த மேடையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் அவர். அப்புறமென்ன? நட்பு தேரில் நாலைந்து பஞ்சர்!
முன்பு இளையராஜா- வைரமுத்துவுக்கு நடுவில்தான் பிரச்சனை பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. இப்போது பாரதிராஜாவும் வைரமுத்துவுமே கூட அப்படியாகிவிட்டதால், மூவேந்தர் இருவேந்தர் ஆகி இப்போது ஆளாளுக்கு சிங்கிள் வேந்தர்களாகிவிட்டார்கள். நஷ்டம் ரசிகர்களுக்குதான் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இப்போதைய மார்க்கெட் ட்ரென்ட்தான் ரசிகர்களுக்கு புரியுமே?
,there sons are in the higher position so they are giving respect them , I didn’t see anything wrong in it .your article is childish.