ரித்திகா சிங்! அஜீத் ஸ்பெஷல் அட்ராக்ஷன்?

நயன்தாரா, த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட சுமார் ஒரு டசன் ஹீரோயின்களை லிஸ்டிலிருந்து நீக்கிவிட்டார் அஜீத். வர வர கதைக்கு மட்டுமல்ல, கதையின் நாயகிக்கும் கூட அஜீத் அதீத அக்கறை காட்டி வருகிறார் அல்லவா? அதை தொடர்ந்துதான் இந்த கன்னாபின்னா டெலிட்! அவரது படத்திற்கு எப்படி தலைப்பு தேடுவார்களோ, அதைவிடவும் பெரிய கஷ்டமாக இருக்கிறதாம் ஹீரோயின் செலக்ஷன். ஒவ்வொரு உதவி இயக்குனரும் பொருத்தமான பத்து கதாநாயகியை லிஸ்ட் செய்ய வேண்டும். அது அப்படியே அஜீத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு டிக் செய்யப்படும் என்றெல்லாம் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறாராம் சிவா.

அந்த வகையில் கடைசியாக அனுப்பப்பட்ட லிஸ்ட், அஜீத்திற்கு ஆனந்தத்தை வரவழைத்திருக்கிறது. காரணம்..? லிஸ்ட்டில் ரித்திகா சிங் இருந்ததுதான். வீட்டிலிருக்கும் பிரத்யேக தியேட்டரிலேயே எல்லா படங்களையும் பார்த்துவிடும் அஜீத், இறுதிசுற்று படத்தையும் பார்த்து ரசித்திருக்கிறார். பொதுவாகவே அவரும் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் என்பதால், படத்தின் ஹீரோயின் ரித்திகா சிங் மீது சின்ன சாஃப்ட் கார்னரும் இருந்ததாம் அவருக்கு.

இந்த முறை அஜீத்தின் ஒப்புதலின் பேரிலேயே ரித்திகாசிங்கிடம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தன்னுடைய முந்தைய பேட்டிகளில் அஜீத்துடன் ஜோடி சேர வேண்டும் என்றெல்லாம் ரித்திகா சொல்லியிருப்பதால், பேரம் சுலபமாக முடிந்துவிடும் என்றே தோன்றுகிறது.

என்னதான் தெளிவாக ஸ்டெப் வைத்தாலும், வழியில் முள் வைக்காமலிருக்கணும் விதி!

1 Comment
  1. Vijay says

    ajith ah pathi yaru perumaiya pesunalum easy chance kidaikum ajith kuda.. athu than unmai… Siruthai sive, soori, ippa Ritika singh..

    But as usual intha news um fake news ah marum last la..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தலைவர் சொல்றதை நம்புறதா வேணாமா? தலைமைக்கு போன் அடிக்கும் ரசிகர்கள்!

“முக அடையாளம் கூட முக்கியமில்லே. ஆள் காட்டி விரலை மட்டும் அமுக்கு!” என்று பரபரப்பாகி திரிகிறது எல்லா அரசியல் கட்சிகளும். இங்கு வாக்கு வங்கியை கணிசமாக வைத்திருக்கும்...

Close