போற வர்ற காக்காவெல்லாம் எச்சம் போடுதே? நடிகர் சங்கம் டென்ஷன்!

ஆர்.கே.செல்வமணியின் ‘மானம் போவுதே’ பேச்சுக்கு செம ஜர்க் ஆகியிருக்கிறதாம் நடிகர் சங்கம்.  சில தினங்களுக்கு முன் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.கே.செல்வமணி படத்தை பற்றியும் தமிழ்சினிமா இப்போது சந்தித்து வரும் இக்கட்டான நிலைமை குறித்தும் பலவாறாக கவலைப்பட்டார். பேச்சோடு பேச்சாக நட்சத்திர கிரிக்கெட் பற்றி அவர் அடித்த கமென்ட், அவ்வளவு சாதாரணமானதில்லை. படு காரம்.

அப்படியென்ன சொன்னார் அவர்?

யாரோ நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் தமிழ்நாடே ஆடுவதாக நினைக்கிறார்கள்..தமிழர்களே ஆடுவதாக நினைக்கிறார்கள். நம் மானம் போகிறது. நடிகர் சங்கத்துக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன் இதுமாதிரி செலிபிரிட்டி கிரிக்கெட்டுக்கு ஆடத்தெரிந்த நடிகர்களை அனுப்புங்கள் .ஆடத்தெரியவில்லை என்றால் சில மாதம் பயிற்சி கொடுத்து அனுப்புங்கள்.இப்படி மானத்தை வாங்காதீர்கள்.

அவர் சொன்னதில் நிறைய அர்த்தம் இருந்தாலும் இதுபோன்ற விஷயங்களுக்கெல்லாமா நடிகர் சங்கம் வாலை பிடித்துக் கொண்டு ஓடும் என்று டென்ஷன் ஆனார்களாம் நடிகர் சங்கத்தில் ஆக்டிவாக செயல்படும் சில ஹீரோக்கள். பெரிய வேடிக்கை என்னவென்றால், செல்வமணி இப்படி பேச வந்ததே நடிகர் பாபுகணேஷின் மகனை ஆட்டத்தில் சேர்க்கவில்லை என்ற ஆதங்கத்தினால்தான். அவர் நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் அந்த இளைஞரை எப்படி ஆட்டத்தில் சேர்ப்பது என்பதெல்லாம் சிசிஎல் காரர்களின் சிக்கலாக இருந்திருக்கலாம்.

தலை தெரியாமல் வால் தெரியாமல், நல்லதை பேசினால் கூட அதையும் நாலு பேரு விமர்சிப்பாங்களே? அது தெரியுமா உங்களுக்கு ‘செல்லா’ மணி சார்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஏப்ரல் மாதத்தில் ஒரு அர்த்த ஜாமத்தில்… இது கலையரசன் கலாட்டா!

‘மெட்ராஸ்’ முகவரியுடன் நடிக்க வந்த கலையரசனுக்கு உயிரைக் கொடுத்து நடித்த ‘டார்லிங்’ படமும் திறமைக்கு விசிட்டிங் கார்ட்டாக அமைய, இப்போது டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார். காரணம், இந்த...

Close