சி.எம்னு சொல்றதுக்கு ஏன் பயப்படுறீங்க? எஸ்.ஏ.சி பேச்சால் பரபரப்பு

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஹீரோவாக நடிக்கும் படம் நையப்புடை! ரிட்டையர்டு மிலிட்டரி ஆபிசராக இவரும், தொலைக்காட்சி நிருபராக பா.விஜய்யும் நடித்திருக்கிறார்கள். விஜய் விக்ரம் என்ற 19 வயது இளைஞர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நடிகை ராதிகா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இங்குதான் தன் இத்தனை நாள் ஆத்திரத்தையும் தாங்கொணாமல் இறக்கி வைத்தார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி.

நிகழ்ச்சியில் பேசிய பா. விஜய், ராதிகாவை பாராட்ட நினைத்து அவரை “சின்னத்திரையின் சி.எம்” என்று வர்ணித்துவிட்டு அமர்ந்தார். அதற்கப்புறம் என்ன நினைத்தாரோ? மீண்டும் வந்து மைக்கை பிடித்தவர், “சினிமா மேக்னெட்னு சொன்னேன். நீங்க வேற எதையாவது நினைச்சுக்காதீங்க” என்று கூற, ராதிகாவே விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் அவருக்கு பிறகு பேச வந்த எஸ்.ஏ.சி கெட்டியாக இந்த விஷயத்தை பிடித்துக் கொண்டார்.

“பா.விஜய்யை நான் பெரிய தைரியசாலின்னு நினைச்சேன். ஆனால் அவர் பெரிய பயந்தாங்கொள்ளியாக இருக்காரே? சின்னத்திரை சி.எம் னு சொல்லிட்டு அப்புறம் ஏன் எதையோ சொல்லி சமாளிக்கிறீங்க? பா.விஜய் யாரையோ நினைச்சு பயந்துகிட்டு இப்ப வந்து எதையோ சொல்லி சமாளிக்கிறார். ராதிகா சின்னத்திரையின் சீஃப் மினிஸ்டர்தான். இதை சொல்றதுக்கு எனக்கு ஒண்ணும் பயம் இல்ல” என்றார்.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எஸ்.ஏ.சி யின் இந்த பேச்சு ஏகப்பட்ட யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது. ஒருவேளை தேர்தல் நேரத்தில் இன்னும் தைரியமாக பேசுவாரோ என்னவோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மிருதன் விமர்சனம்

காலி பெருங்காய டப்பாவுக்குள் கட்டி சூடத்தை தட்டிப் போட்ட மாதிரி, “செஞ்சுதான் பார்ப்போமே” என்ற எண்ணம் சில நேரங்களில் வரும்! அப்படி இந்த படத்தின் டைரக்டருக்கு வந்த...

Close