சாக்ஷி அகர்வால் அறிமுகப்படுத்திய ஸ்ரீபாலம்  சில்க்சின்   நவீனரக பட்டுப்புடவைகள்

நவயுக இந்தியாவின் அடையாளமாக பெங்களுர் விளங்குகிறது என்றால், நவயுக பட்டு புடவைகளின் சங்கமமாக விளங்குகிறது ஸ்ரீபாலம் சில்க் சாரீஸ். ஆண்டுதோறும் பண்டிகை காலங்களுக்கு என புதியரக பட்டுப்புடவைகளை அறிமுகப்படுத்தி வரும் பாலம் சில்க்ஸ், இந்த ஆண்டு தீபாவளிக்கு என புத்தம் புதிய டிசைன்களில் பட்டுப் புடவைகளை முன்கூட்டியே சந்தைக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த பெருமை அடைகிறது.

பெங்களுரின் இதயபகுதியான ஜெயநகர், 5-வது ப்ளாக்கில் அமைந்துள்ளது பட்டுப் புடவை ரசிகர்களின் இதயமான ஸ்ரீபாலம் சில்க்ஸ் சாரிஸ் கிளையில் செப்டம்பர் 18 வியாழக்கிழமை காலை நடைபெற்ற வண்ணமிகு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது ஸ்ரீபாலம் சில்க்ஸ் சாரீசின் நவீன பட்டுப் புடவைகள்.

பட்டுப் புடவைகளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும், பாலம் சில்க்ஸ் நிறுவனர் திருமதி. ஜெயஸ்ரீ ரவி அவர்களின் சிந்தையில் உதித்த புத்தம் புது டிசைன்களான பாலம் ஹ்யூஸ், ஸ்வர்ல் கலெக்ஷன், ஆபரணங்கள் பதித்த பட்டு ஆகியவை முதன்முறையாக மக்கள் பார்வைக்கு அரங்கேறிய காட்சி, பட்டுப் புடவை ரசிகர்களுக்கு கண்கொள்ளா விருந்தாக அமைந்தது. இத்தகைய சிறப்பு மிக்க பட்டுப் புடவைகளை பிரபல கன்னட திரைப்பட நடிகை சாக்ஷி அகர்வால் அறிமுகப்படுத்தினார். இவை மட்டுமல்லாது, ஸ்ரீபாலம் சில்க்சின் ஈடு இணையற்ற கார்ப்பரேட் பட்டு மற்றும் அங்காரிகா பட்டுப் புடவைகளையும் அவர் அறிமுகப்படுத்தினார். ஆகமொத்தம் 5 ரக பட்டுப் புடவைகள் இந்த தீபாவளி பண்டிகைக்கு சந்தையை அலங்கரிக்க வந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஸ்ரீபாலம் சில்க்ஸ் நிறுவனர் திருமதி. ஜெயஸ்ரீரவி, “பாலம் சில்க்சின் தொடர்ச்சியான வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும், இளைய தலைமுறையை ஈர்க்கும் வகையிலும் காலத்திற்கு தக்கவாறு புத்தம் புதிய டிசைன்களில் பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம் ” என்றார்.

ஜரிகையில் ஒட்டியாணம் போன்று உருவாக்கப்பட்டு பார்ப்பதற்கு நிஜ ஒட்டியாணமே அணிந்தது போன்ற தோற்றமளிக்கும் ஆபரண பட்டுப் புடவையும்…. புடவையின் கீழ்பகுதியில் ஜரிகைகளைக் கொண்டு அலை அலையாய் தோற்றம் கொண்ட டிசைனை உருவாக்கி அதில் பெரிய பெரிய பொட்டு போன்ற வடிவங்களை ஆங்காங்கே பதிக்க செய்யும் ஸ்வர்ல் கலெக்ஷ்ன்…. இவற்றுக்கு சிகரம் வைத்தாற்போல் பலவண்ண கலவையின் ஓருருவாய் மிளிரும் பாலம் ஹ்யூஸ்… போன்றவை கட்டாயம் பார்வையாளர்களை ஈர்க்கத் தவறாது. புடவையின் டிசைனுக்கு தக்கவாறு கழுத்துப் பகுதி கொண்ட அங்காரிகா பட்டுப் புடவையும், நடப்பு ஆண்டுக்கான கார்ப்பரேட் பட்டும் பட்டுப்புடவை ரசிகர்களுக்கு ஆவலை அதிகப்படுத்தும்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் சேதுபதி வேண்டாம்! நலன்குமாரசாமி முடிவு?

‘யாரு நடிச்சா என்ன? என் கதை ஜெயிக்கும்’ என்று ஒரு படைப்பாளி நம்புவதில் தவறேயில்லை. ஆனால் தனக்கு முகம் கொடுத்த நடிகரை விட்டு விட்டு இன்னொருவர் பின்னால்...

Close