1000 துப்புரவு தொழிலாளிகளுக்கு அடைக்கலம்! ஒரு மதகை மட்டும் திறந்து ரஜினி கருணை வெள்ளம்!

பல வருஷத்து கேள்விக்கு இப்போதுதான் பதில் தந்திருக்கிறார் ரஜினி. அவரது ராகவேந்திரா மண்டபம் சென்னையில் காஸ்ட்லியான மண்டபங்களில் ஒன்று. ஒரு காலத்தில் இந்த மண்டபம் அமைந்திருக்கும் இடமே எனக்கு சொந்தம் என்றொருவர் வழக்கு தொடுக்க, அதைக் காப்பாற்ற வழி தெரியாத ரஜினி, மேற்படி மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார். உடனே ஒரு ட்ரஸ்ட் துவங்கப்பட்டு மண்டபம் அந்த பெயருக்கு மாற்றப்பட்டது. வேடிக்கை என்னவென்றால் அந்த ட்ரஸ்ட்டின் உறுப்பினர்கள் யாவரும் ரஜினியும் அவரது உறவினர்களுமே!

நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அந்த மண்டபத்தில் ஒரு ஏழை கூட கல்யாணம் நடத்தியதாக முன்னும் வரலாறு இல்லை. பின்னும் வரலாறு இல்லை. அப்புறம் எப்படி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது இந்த மண்டபம் என்ற கேள்வி மட்டும் பலரது மனதிலும் இருந்தது. அந்த கேள்விக்குதான் இப்போது விடை கிடைத்திருக்கிறது. முதன் முறையாக பெருமைக்குள்ளாகியிருக்கிறது மண்டபம். யெஸ்… தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து துப்புரவு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சரியான தங்குமிடமோ, உணவோ வழங்கப்படவில்லை என்ற சலசலப்பு எழுந்தது. உடனே அவர்களுக்கு தனது மண்டபத்தை திறந்து விட்டிருக்கிறார் ரஜினி.

இந்த சென்னை வெள்ளத்திற்கு நடுவில் அவரது கருணை வெள்ளத்தின் ஒரு மதகு மட்டும் திறந்துவிடப்பட்டிருப்பதை உள்ளபடியே நெஞ்சம் நெகிழ வரவேற்றுவிட வேண்டியதுதான்!

5 Comments
  1. srinivasan says

    rajini enra maamanithai patri thavaraga ezhuthi un pizhappai ottum arpapathare nee yennda senja pannada. pichai yedukkanumna neradiya pichai eden da

  2. பிம்பிடிக்கி பிளாப்பி says

    மார்கழி மாசத்தில யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க.. அதான் தலைவரு தொரந்துட்டார்… இதையே தை மாசம் பண்ணுவாரா?

    1. Raja Sivakkumar says

      உன்னைப்போல குறை சொல்லும் நாதாரி கும்பல் இருக்கும் வரை நல்லது செய்ய யாருக்கும் மனம் வராது.
      ரஜினியை புரிந்தவர்களுக்கு மட்டும் தான் ரஜினியை பற்றி தெரியும் …………………. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் ……………….எல்லாம் அந்த இறைவனுக்கே …!!!!!!!!!!!!!

  3. Vivek says

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களுக்கு உதவ ரூ10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் ரசிகர் மன்றங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். தமிழக வெள்ள நிவாரணத்துக்கு கடந்த டிசம்பர் முதல் தேதி ரூ 10 லட்சம் வழங்கிய ரஜினிகாந்த், அதன் பிறகு பெய்த பெருமழை, சென்னை – கடலூரைத் தாக்கிய வரலாறு காணாத வெள்ளத்துக்குப் பிறகு தனது ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு நேரடியாக நிவாரணப் பொருள்களை அனுப்ப உத்தரவிட்டார்.

  4. Udhay G says

    dei editor nee yelaam oru kaasukkumm aaga maata vaaila asingamaa varum BEEP WORDS

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வியாழன்று சென்னை திரும்பும் அனிருத்! விமான நிலையத்தில் மடக்கக் காத்திருக்கும் போலீஸ்?

சிம்பு தலைமறைவாகி சரியாக இரண்டு ராத்திரியும் மூன்று பகலும் ஓடி விட்டன. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த நிமிடத்திலிருந்தே அவரை காணவில்லை. ஒருபுறம் கோவை போலீஸ் மூலம்...

Close