ஒரு வருஷத்துக்கு உடம்பு வலிக்கும்? இது சஞ்சனா வச்ச ஸ்டெப்!

ரஜினியின் இடத்தை பிடிக்க போட்டி நடப்பதை போலவே, நமீதாவின் இடத்தை பிடிக்கவும் போட்டி நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில். ஐட்டம் டான்ஸ் ஆடுறவங்கள்லாம் நமீதா ஆகிட முடியாது. கொஞ்சமாவது நடிக்கவும் செய்யணும் என்கிற யோசனை உள்ளவர்களை மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கவும் செய்கிறது ரசிகர்களின் பூதக்கண்ணாடி மனசு. அப்படி பார்த்தால், சஞ்சனா உள்ளே வந்து நமீதாவின் இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

அவர் அறிமுகமான ரேணிகுண்டா படத்தில் நல்ல வெயிட்டான ரோல் அவருக்கு. எந்த நடிகையும் ஏற்றுக் கொள்ள அஞ்சுகிற கேரக்டரும் கூட. அதை அடித்து தூள் பறத்திய சஞ்சனாவுக்கு அதற்கப்புறம் வந்த கோ, ரகளபுரம், அஞ்சான், மீகாமன் படங்களும் ஒரளவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்ததை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். சரி… இப்போது என்ன கதை?

வேறொன்றுமில்லை… சஞ்சனா இந்திக்கு போய் விட்டார். தோடா லுத்ஃப் தோடா இஷ்க்! இதுதான் அவர் புதுசாக தலை காட்டியிருக்கும் இந்திப்படம். படத்தில் சாவித்ரி, தேவிகா, கனகா மாதிரியெல்லாம் இவரை நடித்து தள்ள சொல்லவில்லை அவர்களும். வந்தமா? நாலு குத்து ஸ்டெப் வச்சோமா? என்றுதான் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அங்கேயும் தன் பர்பாமென்சை காட்டியிருக்கிறார் சஞ்சனா.

நமக்கு திரையிடப்பட்ட அந்த இந்தி பாடலில், அவர் இடுப்பையும் உடம்பையும் ஆட்டுகிற டெக்னிக்கை வேறு யாரேனும் கடை பிடித்தால், தென்னமரக்குடி எண்ணையை தொட்டியில் ஊற்றி குளித்தால் கூட, ஒரு வருஷத்துக்கு உடம்பு வலி போகாது. ஆனால் அசால்ட்டாக அதை செய்திருந்தார் அவர். ‘எப்படிங்க இப்படி ஆடினீங்க?’ என்று கேட்டால், ஷுட்டிங் ஸ்பாட்லேயும் பல பேரு இப்படி அசந்து போய்தான் கேட்டாங்க. நான் அதுக்காக ஸ்பெஷல் ட்ரெய்னிங் எடுத்துக்கிட்டேன் என்றார் சஞ்சனா.

Read previous post:
பி.சி.ஸ்ரீராம் இருக்காக… அனிருத் இருக்காக… ரசூல் பூக்குட்டி இருக்காக….

சாண் ஏறுனா, அதே சூட்டில் முழமும் ஏறுகிற வித்தை சிவகார்த்திகேயனுக்கு கை வந்த கலையாகியிருக்கிறது. இஞ்க் பை இஞ்ச்சாக உயர்வது ஒரு வகை என்றால், இரண்டாயிரம் அடி...

Close