சாந்தன் முருகன் பேரறிவாளன் கதையில் கவுண்டமணி…! தங்கமீன்கள் ராமை முந்திக்கொண்ட இயக்குனர்

அற்புதம்மாள் கதையை படமாக்கணும். என்னோட அடுத்த முயற்சி அதுதான் என்று சமீபத்தில்தான் கூறியிருந்தார் தங்கமீன்கள் ராம். அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் அதிகாரபூர்வமான ஒரு நியூஸ். கோடம்பாக்கத்தில் தயாராகி வரும் ‘வாய்மை’ படமே அற்புதம்மாள் கதைதானாம். சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகிய மூவருக்கு மரண தண்டனை கொடுத்து தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். அந்த கொடுமையிலிருந்து தன் மகன் பேரறிவாளனை மீட்டுவிட வேண்டும் என்று கடந்த கால் நுற்றாண்டு காலமாக போராடி வருகிறார் அற்புதம்மாள். இந்த போராட்டத்தைதான் தன்னுடைய படமாக்கியிருக்கிறார் வாய்மை பட இயக்குனர் செந்தில்குமார்.

ஆனால் இது ராஜீவ் கொலை பற்றியோ, அதன் பின்னணி பற்றியோ பேசுகிற படமல்லவாம். ஒரு கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற தன் மகனை மீட்க போராடும் தாயின் கதை என்று கூறியிருக்கிறார் செந்தில். பேரறிவாளனாக சாந்தனு நடிக்கிறார். மற்ற இருவர் கேரக்டரில் ப்ருத்வி, மனோஜ் நடிக்கிறார்களாம். இதில் கவுண்டமணிக்கு என்ன ரோல்? பென்னி குவிக் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது அவருக்கு. அவரை எப்படி இந்த கதைக்குள் பொருத்தியிருக்கிறேன் என்பதுதான் சஸ்பென்ஸ் என்கிறார் செந்தில். ஆனால்… இந்த கதையை கேட்டவுடன் நான் நடிக்கிறேன்ப்பா… என்றாராம் கவுண்டர்.

அது போகட்டும்… இன்னொரு முக்கிய செய்தி. இந்த படம் சிறப்பாக உருவாக வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார் சிறையிலிருக்கும் பேரறிவாளன். அற்புதம்மாளிடமும் பேசி நிறைய விஷயங்களை படத்தில் நுழைத்திருக்கிறாராம் செந்தில் குமார்.

‘வாய்மை’யே வெல்லும் என்பதை சென்‘சார்கள்’தான் முதலில் நம்ப வேண்டும். ஹ்ம்ம்ம்ம்… என்ன நடக்க போகிறதோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தொட்டால் தொடரும் ட்ரெய்லர்

https://www.youtube.com/watch?v=m9PYWiz7-wk

Close