டப்பிங் பேச வர்ற இடத்துலேயேயுமா? தொடரும் சந்தான சவடால்!

டேய்… ஆயர் ரூவாய்க்கு வாங்குன மாலையா தெரியலையே? உண்மைய சொல்லு. கொடுத்த பணத்துல எவ்ளோ அடிச்ச? என்று ஆளுயர மாலையை தோளில் வாங்கும்போதே கணக்குப் போடும் அரசியல்வாதியின் நிலைமை சந்தானத்திற்கு வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனென்றால் ரசிகர் மன்றத்தை வளர்க்கிறேன் பேர்வழி என்று அவர் பண்ணும் அலம்பல் தாங்க முடியல சார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் டப்பிங் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. பலரும் வந்து போகிற இடமாச்சே? தன்னை தேடி வரும் ரசிகர் மன்ற கண்மணிகளிடம், ‘வெறுங்கையோட வராதீங்கப்பா’ என்று உத்தரவு போட்டிருக்கிறாராம் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம். வாய் நிறைய விசிலோடு வந்து சேரும் ரசிகர்கள் உய் உய் என்று விசிலடித்து ஏ.வி.எம் வளாகத்தையே கதி கலங்கடிக்கிறார்கள். அவர்களிடம் சந்தானம் ‘வரும்போது சும்மா வராதீங்கப்பா ’ என்று கூறியிருப்பதால், ஆளுயர மாலையோடுதான் வருகிறார்கள்.

‘தலைவா வாழ்க. வருங்கால சி.எம் மே வாழ்க’ என்றெல்லாம் இவர்கள் போடுகிற கோஷம், நல்லவேளை போயஸ் கார்டன் வரைக்கும் கேட்கவில்லை.

1 Comment
  1. mathi says

    santhanam cm ma ah ah .super comedy

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘முப்பது நாள் போதும்…’ லிங்காவில் ரஜினியின் கால்ஷீட் அவ்ளோதான்

கோச்சடையான் படத்தில் ரஜினி நடித்தது வெறும் ரெண்டே நாட்கள்தான். மிச்சமெல்லாம் லொல்ளு சபா ஜீவாவே ரஜினியாக நடித்தவை என்றொரு செய்தி கோச்சடையானின் பளபளப்புக்கு குண்டு வைத்து வருகிறது....

Close