சந்தானம் விருப்பம்! அனிருத் தயக்கம்!
‘ஆளுதான் ஒல்லி. பாட்டெல்லாம் படு பயங்கர கில்லி’ என்று இளசுகள் கூட்டம் அனிருத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அவர் கணக்கில் ஓவர் லோடு பணம்! (இதுல பழைய ஆயிரம் நோட்டும் ஐநூறு நோட்டும் எத்தனை இருக்கோ?) வளர்த்து விட்டவர்கள் இப்பவும் தருகிற சொற்ப பணத்தை வாங்கிக் கொள்கிற பெருந்தன்மையும், புதுசாக வருகிற கம்பெனிகளிடம் அடித்து பிடுங்குகிற ஆவேசமும் இல்லாத மனிதராக இருக்கிறார் அனிருத். இது ஒன்று போதாதா? ‘எப்போதும் ராஜா’வாகிவிட்டார் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும்!
இவர் அடிக்கும் அடியும், பேய் கூச்சல் பின்னணியும் இளசுகளுக்கு பிடித்திருப்பதால், வேறு வழியே இல்லை. அனிருத் பின்னால் ஓட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தவர்களின் லிஸ்டில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். கடந்த சில மாதங்களாக நம்ம படத்துக்கு மியூசிக் நீங்கதான் என்று உரிமையோடு கேட்கிற அவருக்கு அனிருத் சைடிலிருந்து ஒரு சிக்னலும் இல்லை.
நண்டு, நத்தை, வண்டு, வெடக்கோழின்னு எல்லாத்துக்கும் இசை பணிகிற அனிருத், ஏன் சந்தானத்தை மட்டும் மதிக்கவே மாட்டேன் என்கிறார்? இதுதான் கோடம்பாக்கத்தை பிடித்து ஆட்டுகிற பெரும் கேள்வி. இருக்கும்… ஏதாச்சும் காரணம் இருக்கும்…!