அடுத்த படத்தையும் உங்க கையிலயே ஒப்படைக்கிறோம் சந்தானம்…
சொந்த வீட்ல கரண்ட் போனா கூட எதிர்வீட்ல இருக்கா பாரு? என்று விசாரித்து திருப்திபடுகிறவன்தான் தமிழன். அப்படியொரு ‘டகால்ட்டி’ தமிழனாகியிருக்கிறார்கள் பலர். அதுவும் சந்தானம் விஷயத்தில்.
‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பாடல் வெளியீட்டு விழாவில், செம கித்தாப்பு காட்டினார் சந்தானம். இந்த பேச்சை அப்படியே யூ ட்யூபில் பார்த்த நம்ம ஹீரோக்கள் பலர், மூக்குல ட்யூப் வைக்கிற அளவுக்கு மூர்ச்சையானார்கள். அவ்ளோ தெனாவட்டா பேசுற சந்தானத்திற்கு இருக்குடா ரிவிட் என்றெல்லாம் இவர்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்க, படத்தை எடுத்த கையோடு நாலைந்து கோடி லாபத்திற்கு பிவிபி நிறுவனத்திற்கு தள்ளிவிட்டுவிட்டார் சந்தானம்.
இதற்கு முன்பு இவர் தயாரித்த ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்தையும் நல்ல விலைக்கு கைமாற்றிவிட்ட கில்லாடியாச்சே? அதே ஸ்டைலில் இப்போது இந்த படத்தையும் தள்ளிவிட்டிருக்கிறார் சந்தானம். வாங்கி வெளியிட்டிருக்கும் பிவிபி நிறுவனம், முன்பதிவு, பின் பதிவு, சைட் பதிவு எல்லாவற்றையும் உண்டியல் குலுக்குவது போல குலுக்கிக் கொண்டிருக்கிறது. தியேட்டர்களிலும், பாதிக்கு மேல் ஃபுல் ஆவாத புல் ஆயுதத்தை எப்படியாவது ஓட வைத்தாலொழிய போட்ட காசை எடுக்க முடியாதே?
அதனால் தியேட்டர் விசிட் போக சொல்லி கேட்டிருக்கிறார்களாம். சந்தானமும் தனது படத்தின் ஹீரோயினோடு நிறைஞ்ச மனசோடு கிளம்பிவிட்டார். இப்படி இழுத்த இழுப்புக்கெல்லாம் சந்தானம் இசைந்து வருவதால், ‘ஏன் அடுத்த படத்தையும் சந்தானத்தையே ஹீரோவாக வைத்து எடுக்கக் கூடாது?’ என்று நினைத்ததாம் அந்நிறுவனம். சட்டென ஒரு அட்வான்சை கையில் திணித்து, ‘எங்க அடுத்த படமும் உங்க கையில்தான் இருக்கு’ என்று கூறிவிட்டதாம்.
கடந்த சில வாரங்களாக ஏன்… நானே இயக்குனராகிற ஆசையிலதான் இருக்கேன். சந்தர்ப்பம் கிடைச்சா நானே இயக்குனர் ஆவேன் என்றெல்லாம் கூறிவந்தார் சந்தானம். பிவிபி யே வலிய வந்து மறுபடியும் கழுத்துல மாலை போட்டுக் கொண்டு நிற்பதால், கத்திய தீட்டிருவோம் என்று அவரே இயக்குனரானாலும் ஆச்சர்யமில்லை.
முன்னணி ஹீரோக்கள், காமெடியன்கள் எல்லாரும் இதை நினைச்சு நினைச்சு நல்லா பொசுங்குங்க…. சந்தானத்துக்கு என்ன வந்துச்சாம்?