அண்ணே எப்ப போவாரு? திண்ணை எப்ப காலியாவும்? சதீஷ், கருணாகரன் காட்டில் தூரல்!

இனிமேல் ஹீரோதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சந்தானம். வடிவேலு ஓய்ஞ்ச நேரத்தில் உள்ளே வந்த சந்தானம், தனது வாக்கு மற்றும் நாக்கு வன்மையால் ஸ்டிராங்கான இடத்தை பிடித்துவிட்டார். வடிவேலுவே திரும்ப வந்தாலும், இனி சந்தானத்தை கெட்டவுட் சொல்ல முடியாத இடத்தில் அமர்ந்துவிட்டார் அவர். இந்த நேரத்தில்தான் அவரது ஹீரோ ஆசை மற்றவர்களுக்கு தேன் கூடு மடியில் விழுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

சந்தானம் ஒரு புறம் கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டிருக்கும்போதே சைட்ல கையை விட்டு சூரியும் கிச்சுகிச்சு மூட்டினார். சந்தானம் ஹீரோவானாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி, அவருக்கொன்றும் லாப நஷ்டம் இல்லை. இருந்தாலும், சந்தானத்தின் சில பல ஏரியாக்கள் இப்போது சூரி வசம்! டைரக்டர் ஹரி, சுந்தர்சி போன்ற சந்தான ரசிகர்கள், இப்போது சூரிக்கு வெல்கம் சொல்லிவிட்டார்களாம். அரண்மனை 2, சிங்கம் 3 ஆகிய படங்களில் சூரிதான் நடிக்கப் போகிறார்.

இது தவிர மார்க்கெட்டில் பரபரப்பாக இருக்கும் சூரி, வேண்டாம் என்று மறுத்த வாய்ப்புகளையும் கைப்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள் சதீஷும், கருணாகரனும். தனிப்பட்ட திறமை இருந்தால் மட்டுமே காமெடியில் நின்று அடிக்க முடியும். அந்த திறமை இவர்கள் இருவருக்குமே இல்லை என்பதாலும், கிடைத்த வாய்ப்பை காப்பாற்றிக் கொள்ள யாருக்காவது பணம் கொடுத்தாவது ஸ்கிரிப்ட் எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறை இல்லாததாலும் இவர்களுக்கு இந்த வாய்ப்பும் சொத்தையாகவே முடியும் என்று கால்குலேஷன் போடுகிறது பீல்டு.

இவ்வளவு பற்றாக்குறை நேரத்திலும், வடிவேலு இருக்காருய்யா என்று சொல்ல முடியாதளவுக்கு அவர் ஒரு பக்கம் முறுக்கிக் கொண்டு நடக்கிறார். அதுதான் ஐயே!

Read previous post:
நயன்தாரா நாடகம்! பித்துப் பிடித்தலையும் மீடியாக்கள்

‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்ற சந்தோஷத்திலிருக்கிறார் நயன்தாரா! கடந்த ஒரு மாதகாலமாகவே அவ்வப்போது அவரது புதிய காதல் பற்றி எழுதுவதற்கும் பேசுவதற்குமாக சுற்றி சுற்றி...

Close