இனிமே பவர் ஸ்டாரும் வேணாம்… சோலார் ஸ்டாரும் வேணாம்… சந்தானம் ஸ்ட்ரெயிட்!

காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் ‘காமெடி சுமார் ஸ்டார்’ ஆவதற்குள் விழித்துக் கொண்டார். எப்படி எப்படி வளைஞ்சது எப்படி?

அதை தெரிந்து கொள்வதற்கு சந்தானத்தின் பிளாஷ்பேக் வாரங்களை எட்டிப் பார்க்கணும். அதாவது ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் ரிலீசுக்கு முன்பு அவர் எடுத்த முடிவிலிருந்து சற்றே கீழிறிங்கி வந்திருப்பதாக தெரிகிறது. அது என்ன என்பதை இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த அப்படத்தின் வெற்றி சந்திப்பில் வெளிப்படுத்தினார். ‘லிங்கா படத்தில் ரஜினி சாருடன் நடிக்கிறேன். ஏற்கனவே எந்திரன் படத்தில் சார் கூட நடிச்சுருக்கேன். சார் பக்கத்துல இருந்து அவரோட பேசிகிட்டு இருந்தாலே போதும்னு இருந்திச்சு. கிட்டதட்ட ரெண்டு மாசம் கால்ஷீட் கொடுத்திருந்தேன். இப்போது மறுபடியும் அவர் கூட சேர்ந்து லிங்காவில் நடிக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்புறம் உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா படத்தில் நடிக்கிறேன்‘.

‘நடுவுல வேற வேற படங்களில் காமெடி வேடங்களில் நடிச்சுட்டு மறுபடியும் ஒரு படத்தில் ஹீரோவா நடிக்கலாம்னு முடிவு. அந்த படம் ஜுலையில் ஆரம்பிக்குது. என்னோட விஜய் டி.வி யில் வொர்க் பண்ணிய நண்பர் ஒருவர்தான் அந்த படத்தை டைரக்ட் பண்ண போறாரு. அநேகமா ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் ஹீரோயினே இந்த படத்திலும் ரிப்பீட் ஆகலாம்‘ என்று சம்பிரதாயமாகவே பேசிக் கொண்டிருந்தார் சந்தானம்.

முக்கியமாக அவர் சொன்ன ஒரு விஷயம், சம்பந்தப்பட்டவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கக் கூடும். ‘அடுத்த படத்தில் பவர் ஸ்டாரும் என்னோட நடிக்க மாட்டார். சோலார் ஸ்டாரும் என்னோட நடிக்க மாட்டார். வேற ஒருவரைதான் யோசிக்கணும்‘ என்றார் சந்தானம். அப்படியே கேள்வி பதில் மெல்ல நீண்டு சிவகார்த்திகேயனில் வந்து நின்றது.

உங்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பனிப்போர் நிலவுதாமே? ரெண்டு பேரும் சேர்ந்து நடிப்பீங்களா, மாட்டீங்களா? என்றொரு கேள்வி எழுப்பப்பட, சற்றே ஷேக் ஆன சந்தானம், சட்டென்று ஷோக்கானார். ‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார். நல்ல கதை அமைஞ்சா நிச்சயமா சேர்ந்து நடிப்போம். ஆனால் இந்த இடத்தில் கமல் சார் சொன்ன ஒரு விஷயத்தைதான் சொல்லணும்னு நினைக்கிறேன். சினிமாங்கறது காடு மாதிரி. அங்கு எல்லா மிருகங்களும் இருக்கும். அது அதுக்கு ஏற்ற மாதிரி உணவு கிடைக்கும். அது மாதிரிதான் யார் யாருக்கு என்னென்ன கிடைக்கணுமோ, நிச்சயம் கிடைக்கும்’ என்றார்.

இது தத்துவமா, விரக்தியா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஸ்ரீ ரஜினிகாந்த் ஆகாயப்படை! கோச்சடையானுக்காக விதவிதமான பெயர்களில் குவியும் ரஜினியின் ரசிகர் படை

கோச்சடையான் படத்தை வரவேற்க தயாராகிவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள். நாடு முழுவதுமிருக்கிற அவரது தீவிர ரசிகர்கள் முன்பு இருந்த தங்களுடை ரஜினி ரசிக வெறிக்கு சற்றும் குறையாமல் கிளம்பியிருப்பது...

Close