அண்ணன் போவல… திண்ணையும் காலியில்ல… சந்தானத்தால் சூரிக்கு அதிர்ச்சி

அதிகப்படியான சந்தோஷமே அண்ணாச்சிங்க ஊரைவிட்டு கிளம்பும்போதுதான் ஏற்படும் சிலருக்கு. அவர் தேய்ச்ச திண்ணைய கைப்பற்றலாமே என்கிற ஸ்மால் மைண்ட்தான் இதற்கெல்லாம் ரீசன்! அப்படிதான் சந்தானம் முழு நேர ஹீரோவாகப் போகிறார் என்பது தெரிந்ததும் சூரிக்கு ஏற்பட்டது. ஆனால் சந்தானம் போன கையோடு திரும்பி வந்ததில் பேரதிர்ச்சிக்கு ஆளானது சந்தானத்தை முழு நேர ஹீரோவாக பார்க்க நினைத்த அவரது உற்றார் உறவினர், சுற்றார் சுகவீனர்களுக்கு கூட இல்லை…. சூரிக்குதான்!

விமல், விதார்த், சற்று அதிகப்படியாக சிவகார்த்தியேன், அதற்கும் அதிகப்படியாக விஜய் தவிர, வேறு திண்ணைகளில் கையை காலை நீட்டி கூட ஒதுங்க முடியாத நிலையிலிருக்கிறார் சூரி. மற்ற ஹீரோக்கள் எல்லாரையும் ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது சந்தானத்தின் சர்வ பெரிய அட்ராக்ஷன். அவ்ளோ பெரிய ரஜினியே சந்தானத்தின் கால்ஷீட் இருக்கா பாரு என்கிற அளவுக்கு போய்விட்டது அவரது வலிமை. இருந்தாலும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் முடிவடைகிற தருவாயில் ‘கொஞ்சம் ஓவராதான் நடந்துக்குறோமோ?’ என்று சந்தானமே தனிமையில் யோசிக்கிற அளவுக்கு ஸ்டெப்புகள் பலமாகி கிடந்ததும் உண்மைதான். ஆனால் அப்படம் கொடுத்த பப்பட ரிசல்ட்டில் தனது கொள்கையை சற்றே ரீசெட் செய்துவிட்டார் சந்தானம்.

வழக்கம்போல காமெடி பண்ணுவேன். தேவைப்பட்டா, நல்ல கதை அமைஞ்-சா, அந்த கதை ஷ்யூர் ஹிட்டாவும்னு தெரிஞ்-சா என்று ஏகப்பட்ட ….‘ஞ்சா’க்களோடு தனது ஹீரோயிசத்தை கிட்டதட்ட முடிவுக்கே கொண்டு வந்துவிட்டார். இந்த நிலையில்தான் சிறிது காலமாக முன்னணி ஹீரோக்களுக்கான அவுட் கோயிங் பெஃசிலிட்டியை முற்றிலுமாக தடை செய்திருந்த சூரி, ‘ஹலோவ்வ்வ்வ்வ்வ்…. நான் சூரி பேசுறேன். நல்லாயிருக்கீங்களா?’ என்று நலம் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.

தண்ணீர் குழாயை டைரக்டா மேகத்தோடவே லிங்க் கொடுக்கிற ஆசையில சுத்துதுப்பா எல்லாருடைய மனசும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஐ பட ஆடியோ விழாவில் பில் கிளின்ட்டன், அர்னால்டு?

தமிழ்சினிமாவில் இப்போதுதான் கார்ப்பரேட் கம்பெனிகள் வந்து படம் எடுக்கிறார்கள். ஆனால் பதினைந்து வருடங்களுக்கு முன்பே கார்ப்பரேட் ஸ்டைலில் கம்பெனி நடத்தியவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். பிரமாண்ட இயக்குனர் என்று...

Close