களத்தில் குதித்தார் சரத்குமார் ‘ கத்தி ’ தப்பிக்குமா?
எலி வளையா இருந்தாலும், தனி வளை வேணும் என்று விஜய் ரகசியமாக நினைத்ததன் விளைவு? இன்று அவரது படங்கள் வரும்போதெல்லாம் கொம்பு சீவிக் கொண்டு நிற்கிறது அரசியல்! மன்றம் இயக்கமா மாறலாம். இயக்கம் கட்சியா மாறுமா? என்றெல்லாம் ரசிகர்கள் உசுப்பிவிட்டதன் விளைவைதான் வெவ்வேறு வகையில் அனுபவித்து வருகிறார் விஜய். இந்த நேரத்தில் ‘கத்தி’, கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கிவிடும் என்கிற சூழ்நிலைதான் இந்த நிமிடம் வரைக்கும். ‘அம்மா நினைச்சா எல்லாம் மாறலாம்’ என்கிற குரல் கோடம்பாக்கம் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்க, அம்மாவை சந்திக்கும் முயற்சியில் அரை கிணறு தாண்டிவிட்டாராம் விஜய்.
யெஸ்… விஜய் தரப்பு நடிகர் சங்க தலைவர் சரத்குமாரை சந்தித்து முறையிட்டிருக்கிறதாம். அவரது உதவி இந்த நேரத்தில் தேவை என்று வலியுறுத்தி கேட்கப்பட்டதாம். ஒருவழியாக இந்த பிரச்சனையில் தலையிட மனப்பூர்வமாக சம்மதித்தும் விட்டாராம் சரத். அவரது முயற்சியிலேயே அம்மாவை சந்திப்பார் விஜய் என்கிறார்கள்.
இதற்கிடையில் தமிழ்சினிமாவில் முன்னணியில் இருக்கிற பல தயாரிப்பு நிறுவனங்கள் கத்தியை அப்படியே கைமாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறார்களாம். அம்மாவும் மனசு வைத்து, இவர்களும் கை கோர்த்தால், கத்தியை வெல்ல அந்த கத்தி கபடா வந்தால் கூட முடியாது!
விஜய்… இப்போது கூலிங் விஜய் ஆகியிருப்பதாகவும் கேள்வி!