ஹன்சிகா தமன்னா ஜோடியாக அண்ணாச்சி நடிக்கும் புதிய படம் விரைவில்? போடுங்கம்மா ஓட்டு அண்ணாச்சியை பார்த்து!
‘கபாலி’ ட்ரெய்லர் ஃபீவரையெல்லாம் ஒரு நொடியில் காலி பண்ணி கப்சிப் ஆக்கிவிட்டது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம்! தீபாவளி, பொங்கல், கிருத்திகை, கீரைக்கூட்டு திருவிழா என்று பின்னால் எது வந்தாலும் மூணு மாசத்துக்கு முன்னாலேயே அது தொடர்பான அண்ணாச்சி கடை விளம்பரம் வந்துவிடும் டி,.விகளில். “இவளுங்கல்லாம் சோப்புல குளிப்பாளுகளா… இல்ல சோப்பாவே இருப்பாளுகளா….?” என்று பொதுஜனம் வாயோரத்தில் வடிக்கும் எச்சிலை கர்நாடகாவுக்கு திருப்பி விட்டால் மாநிலத்துக்கே சேர்த்து மூணு போகம் நெல்லு அறுக்கலாம்.
சூர்யா, மாதவன், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் என்று அண்ணாச்சி கடைக்காக கோட் சூட்டில் வந்து கொலு பொம்மையாக அட்ராக்ட் பண்ணியிருக்கிறார்கள் நம்ம டாப் ஹீரோக்கள். சினேகா, அனுஷ்காவில் ஆரம்பித்து, தமன்னா, ஹன்சிகா என்று கலர் காட்டி, நேற்று வந்த லேட்டஸ்ட் ஹீரோயின் வரைக்கும் அண்ணாச்சிக் கடை புடவையை கட்டாத அழகிகளே இல்லை.
இப்படி ஊருக்கெல்லாம் கொட்டிக் கொடுத்த அண்ணாச்சி, திடீரென சிக்கனத்திற்கு மாறினாரா, அல்லது சீசனையே மாற்றித் தொலைவோம் என்று நினைத்தாரா தெரியவில்லை. அவரே கோட் சூட்டில் தோன்றி, “அண்ணாச்சி கடைக்கு வாங்க” என்று கைகூப்பி தொழ ஆரம்பித்துவிட்டார். அவருடன் அழகு காட்டி நடந்து வருவது வெண்ணை கட்டிகளான தமன்னாவும் ஹன்சிகாவும். இந்த அருமையான விளம்பரத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தவர்கள் யார் தெரியுமா? இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இரட்டையர்கள்தான். பின்னணி இசை தாஜ்நூர்.
ஒருகாலத்தில் அமிதாப்பச்சன் தமிழில் படம் தயாரித்தபோது, அந்த படத்தை இயக்கியவர்கள்தான் இந்த ஜேடி.ஜெர்ரி இரட்டையர்கள். அதற்கப்புறம் அமிதாப்பச்சன் இன்று வரை தமிழ்நாட்டு பார்டரை மிதிக்கும்போதெல்லாம் அய்யனாரப்பன் கோவில் தாயத்து கயிறை கட்டாமல் காலை தூக்கி வைப்பதேயில்லை. போகட்டும்… இப்போது ஜேடி ஜெர்ரியே இந்த அண்ணாச்சியை “வாங்க ட்ரெயல் பார்க்கலாம்” என்று அழைத்ததாக தெரிகிறது.
எனவே விரைவில் அண்ணாச்சி வழங்கும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ என்ற படம் திரைக்கு வந்தாலும் வரும். அதென்னய்யா படத்துக்குமா இந்த பேரு வைப்பாங்க என்று கேட்பவர்களுக்கு… ஒரு நினைவூட்டல். ‘இதயம் பேசுகிறது’ என்ற புகழ் பெற்ற வார இதழை விலைக்கு வாங்கி ‘சரவணா ஸ்டோர்ஸ்| என்று பெயர் மாற்றி வார இதழாக கடைகளில் தொங்க விடுகிற அளவுக்கு துணிச்சல் மிக்க ஒரே நிறுவனமாக விளங்கியது நம்ம சரவணா ஸ்டோர்ஸ்தானே!?
உழைப்பால் உயர்தவர் , எவன் உழைப்பிலும் வாழவில்லை!…
அவர் கடையை அவரே விளம்பர படுத்துகிறார்!!…
இதுவே, அவர் தன் ரத்தத்தில் ஊறிய வியாபாரத்தின் மீது கொண்ட பற்றைகாட்டுகிறது!!!..