மறுபடியும் மொதல்லேந்தா? சசிகுமாரை அலற விட்ட பாலா!

அடித்து உதைத்து கசக்கி சக்கையாய் பிழிந்தாலும், அதை பாலா செய்கிறார் என்றால் மனப்பூர்வமாக சம்மதிப்பார்கள் அத்தனை ஹீரோக்களும்! ஏனென்றால் பாலா படத்தில் நடிக்கிற எல்லா ஹீரோக்களுக்கும் எதிர்காலம் என்னவோ சூரியனே கண் கூசுகிற அளவுக்கு பிரகாசமாக அமைந்துவிடும். இந்த ஒரு பம்பர் லாட்டரிக்காக எத்தகைய துன்பத்தையும் சமாளிக்க தயார்தான். ஆனால் ஒரு மாதம் கசக்கி பிழிந்து எடுத்துவிட்டு, எல்லாம் டெஸ்ட் ஷுட்டிங் என்றால் எப்படியிருக்கும்?

அப்படிதான் ஆகியிருக்கிறாராம் சசிகுமார். வேறொன்றுமில்லை… பாலா தற்போது எடுத்துக் கொண்டிருக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் சசிகுமாருக்கு வித்தியாசமான கெட்டப். அதென்னவோ பாலா படத்து ஹீரோக்களுக்காகவே எகனை மொகனையாக ஒரு ஹேர் ஸ்டைலை யோசித்து வைப்பார்கள். இந்த படத்திலும் அப்படியொரு ஹேர் ஸ்டைல், முக அமைப்பு என்று முற்றிலும் மாறியே போயிருந்தார் சசி.

சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்ததாம். மிச்சத்தை அடுத்த ஷெட்யூலில் பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி வந்த பாலா, படத்தை எடுத்தவரைக்கும் போட்டு பார்த்திருக்கிறார். அதிர்ச்சியோ அதிர்ச்சி. அந்த கெட்டப்பில் சசிகுமாரை பார்க்க சகிக்கவில்லையாம். படத்தில் பங்கு பெற்ற இதர டெக்னீஷியன்களும், ‘அண்ணே… இந்த கெட்டப்போடு சசியை வெளியில் விட்டால் அவருக்கும் பிரச்சனை. படத்தையும் ரசிப்பார்களா என்று தெரியாது. எனவே அவரை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாக்காமல், பழைய சசியாகவே மாற்றி எடுத்தால்தான் இந்த தாரை தப்பட்டை தப்பிக்கும்’ என்றார்களாம். பாலாவிடம் இப்படி நேருக்கு நேராக சொல்கிற துணிச்சல் யாருக்கு வரும்? என்றெல்லாம் யோசிக்கவே தேவையில்லை. ஏனென்றால் மனசில் பட்ட கருத்தை பயப்படாம சொல்லுங்க என்று கேட்டுக் கொண்டதே அவர்தானாம்.

இப்படி மற்றவர்கள் எல்லாரும் கூட்டமாக கூடி குல விளக்கை காப்பாற்றிவிட்டார்கள். சசியை பழைய நிலைமைக்கு மாற சொல்லிவிட்டாராம் பாலாவும். இன்னும் சில வாரங்கள் விட்டு மீண்டும் ஷுட்டிங் கிளம்புவதாக திட்டம். அப்படியென்றால் இதுவரைக்கும் எடுத்த போர்ஷன்? பாலா படத்தில் ஸ்கிரினுக்கு தப்பி வந்ததைவிட வெட்டி எறிந்ததுதான் அதிகம். மேதைங்க வாழ்வில் இதெல்லாம் சகஜமப்பா…!

1 Comment
  1. ananth says

    mr.anthanan halwaava niruthunga bala methaina bala copy atikum getup nadikarkalin sonthakaarar aana dir.bharathiraaja yaaru, bala methai illa prorera yosika theriyaathavar, eduthathai vaithu besta ottakoodiyavar

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Kalavadiya Pozhudhugal Movie Posters

Close