தற்கொலைக்கு காரணம் சசிகுமார் இல்லை! -ஒரு விளக்கம்…

‘சசிகுமார் மீது சாவு பழி! நட்புக்கு இதுதானா மரியாதை?’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். நம்மை தொடர்பு கொண்ட சசிகுமாரின் நண்பர்கள், நிஜத்தில் நடந்தது இதுதான் என்று சில தகவல்களை கூறினார்கள். அது அப்படியே இங்கே-

“உதயகுமாரும், டைரக்டர் சசிகுமாரும் அண்ணன் தம்பிகள் போல பழகியதை சினிமாவுலகமே நன்கு அறியும். சுப்ரமணியபுரம் தொடங்கி, கிடாரி வரைக்கும் கூட உதயகுமார் சசிகுமாருடன்தான் இருந்தார். ‘கிடாரி படத்தில் பணிபுரிய முடியவில்லை’ என்று அவர் தெரிவித்த போது சசிகுமார்தான் வலுக்கட்டாயமாக உதயகுமாரை பக்கத்திலேயே வைத்திருந்தார். அவருக்கு வழக்கம் போல நிறைவான சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ, அவரால் படங்களில் பணியாற்ற முடியாதளவுக்கு மனச்சுமை இருந்து வந்தது”.

“நான் நல்லாயிருக்கும் போது என் படத்தில் வொர்க் பண்ணினே. இப்போ நான் பைனான்ஸ் பிரச்சனையில் இருக்கேன். நீ இந்தப்படத்தில் இருந்தால், செலவுகள் பாதியா குறையும். தயவு செய்து போக வேண்டாம் என்று டைரக்டர் சொன்ன பிறகும், கொஞ்ச நாள் அமைதி வேணும்னு அவரா கிளம்பிப் போனார். காரைக்கால் லாட்ஜில் தற்கொலைக்கு முயன்று, பேன் அறுந்து விழுந்ததால் அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலை கேள்விப்பட்டு, உதயகுமாரின் சொந்த ஊரான கோயமுத்தூருக்கு முதலில் ஓடியவர் சசிகுமார்தான்”.

“அவர் அழுத அழுகையை பார்த்த உதயகுமாரின் தாய் மாமாவே, சசிகுமாரை தேற்றி அனுப்பி வைத்தார். ஆனால் உடல் மிக அழுகிய நிலையில் இருந்ததால், சசிகுமார் காரைக்கால் செல்வதற்குள் அவரது உடலை அடக்கம் செய்துவிட்டார்கள். உதயகுமாரின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இப்போதும் பரிதவித்து வருகிறார் சசிகுமார்” என்றார்கள்.

முந்தைய செய்தி திரையுலகம், சசிகுமார் பற்றி சொல்லி வரும் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான். இந்த விளக்கம் ஒட்டுமொத்த திரையுலகத்திற்குமானதாக இருந்தால் நல்லதுதான்!

To listen Audio Click below:-

https://youtu.be/Q-6INKfFHHE

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Kattapava Kanoom Audio Launched Stills Gallery

Close