தனுஷ்- சிவகார்த்திகேயன்! நடுவில் கிடந்து அல்லாடும் சதீஷ்?

காமெடி சதீஷ் சிவகார்த்திகேயனின் குட் புக்கில் இருப்பவர். அது மட்டுமல்ல, சமீபத்தில் சிவா வீட்டு கிரஹப்ரவேசத்திற்கு அழைக்கப்பட்ட சிலரில் ஒருவர் சதீஷ். அப்படியென்றால் இவருக்கும் அவருக்குமான நட்பில் எந்தளவுக்கு க்ரீன் லேம்ப் வெளிச்சம் அடித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படியாப்பட்ட சதீஷுக்குதான் இப்போது இருதலைக் கொள்ளி நிலைமை என்கிறது ஃபீல்டு.

தனுஷும் சிவகார்த்திகேயனும் ஒரு காலத்தில் திக்கோ திக் பிரண்ட்ஸ். இப்போது அந்த பிரண்ட்ஷிப்பே திக் திக் என்றாகிவிட்டது. நடுவில் சிவாவால் தனுஷின் நெருங்கிய வட்டத்திற்குள் வந்திருந்தார் சதீஷ். அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் இவரும். இவர் விட்டால் அவர். அவர் விட்டால் இவர் என்று மாற்றி மாற்றி அன்பு செலுத்தி வந்த சதீஷ், நடுவில் ஒரு கெட்ட காரியத்தை செய்ததாக கிசுகிசுக்கிறது ஏரியா. என்னவாம்?

மான் கராத்தே படத்தில் சதீஷுக்கு முக்கிய ரோல் தரப்பட்டிருந்தது. அந்த படத்தின் கதை சதீஷுக்கு அத்துப்படி. அதற்கப்புறம் வை ராஜா வை படம் துவங்கப்பட்டது. அந்த படத்திலும் சதீஷுக்கு நல்ல கேரக்டர். கொஞ்சம் ஊன்றி கவனிப்பவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். இந்த கதையும் அந்த கதையும் கிட்டதட்ட ஒன்றேதான். மான் கராத்தே கதையை கசிய விட்டவரே சதீஷ்தான். அதன் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படம்தான் வைராஜா வை என்றும் கிசுகிசுக்கிறார்கள் இங்கே.

இப்படி குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரி, ஏதோ ஒன்றால் ஏதோ ஒன்றாகி நிற்கிறார் சதீஷ். தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நடக்கும் மனப் போராட்டத்தில், சுடு கஞ்சியாகி யார் பக்கம் சப்போர்ட் பண்ணுவது என்கிற பெரும் குழப்பம் அவரை சூழ்ந்திருப்பதாக தெரிகிறது. இருவருமே ஒண்ணு இங்க இரு… இல்லேன்னா அங்க போ என்கிறார்களாம்.

‘கதவ தெறடி ருக்கு… என் காலு வலிச்சுக் கெடக்கு’ என்று கதற, அவரும் இவரும் ஃபீமேல் பிரண்ட்ஸ் இல்லையே? அனுபவிங்க சதீஷ், அனுபவிங்க!

Read previous post:
குள்ள அப்பு ஃபார்முலாவே இன்னும் வௌங்கல… அதற்குள் விஜய்?

தமிழ்சினிமாவில் தனக்குத் தானே பரீட்சை வைத்துக் கொண்டு பாசா? பெயிலா? கணக்கு பார்ப்பதில் கமலுக்கு நிகர் அவரே! பெரும்பாலும் ஏண்டா எழுதி தொலையுறாரு? என்கிற அளவுக்கு இம்சையை...

Close