சத்யராஜின் புது முயற்சி! அறுபதிலும் ஆசை வரும்?

அறுபது வயதாகிறது சத்யராஜுக்கு. இத்தனை ஆண்டுகாலமாக அவருக்கு வராத ஆசை, பாகுபலிக்கு பிறகு வந்திருக்கிறது. அந்த படத்தால் அவருக்கு சேர்ந்த அண்டை மாநில ரசிகர் கூட்டமும், அதையும் தாண்டிய எல்லா மொழி பட அழைப்புகளும்தான் இந்த ஆசைக்கு காரணம்.

அட… ஆசை என்னய்யா? அதை சொல்லு முதல்ல!

வேறென்ன? ஒரு நேஷனல் அவார்டு வாங்கிவிட வேண்டும் என்றுதான். இதற்கு முன் சத்யராஜ் நடித்த சில படங்கள் அதற்கு தகுதியான படங்களாகவும் இருந்திருக்கின்றன. தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு படத்திற்காக சத்யராஜுக்கு தேசிய விருது கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்தார்கள். ஆனால் எல்லாவற்றிலும் தலையை நீட்டி பிராடு பண்ணும் அரசியல், சத்யராஜ் விஷயத்திலும் எட்டிப் பார்க்க, கை நழுவிப் போனது அந்த வாய்ப்பு.

சத்யராஜ் புலிகளின் ஆதரவாளர். தீவிர பகுத்தறிவு சிந்தனை கொண்டவர். இதெல்லாம்தான் அவருக்கு தேசிய விருதுகள் கிடைக்காமல் தடுத்த காரணிகள் என்பது பரவலான அபிப்ராயம். இனியும் அந்த நேஷனல் விருதை நெருங்காமலிருக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறாராம் சத்யராஜ். அவரே அவார்டுக்கு தகுதியான ஒரு படத்தை தயாரிக்கப் போகிறார். அதற்காக கதை உருவாக்கும் படலம் ஆரம்பம் ஆகிவிட்டது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

கதை முழுமையாக தயாரானதும் படம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படுமாம்.

Read previous post:
என் மனதை புண்படுத்த வேண்டாம்! விஜய்யின் உருக்கமான அறிக்கை!

சரியாக புலி வெளியாவதற்கு முதல் நாள் நடிகர் விஜய் மற்றும் சில திரையுலக புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விஜய்...

Close