எந்த நடிகையை கூப்பிட்டாலும் வரலேன்னா என்ன பண்ணுறதாம்? நடிகர் ஜீவா புலம்பல்!
பணம் கொட்டோ கொட்டென கொட்டுகிற ஆட்டம் என்றால் அது கிரிக்கெட்தான். அதுவும் சினிமாக்காரர்கள் விளையாடுகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும்? கூட்டம் பிய்ச்சுக்குதாம். சென்னை ரைனோஸ் என்ற பெயருடன் ஹீரோ விஷால் தலைமையில் ஆடி வந்த நம்ம கோடம்பாக்கம் நடிகர்களில் பலர், இப்போது ஜீவாவை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். விஷால் என்னவானார்? ‘நமக்கு நிறைய வேலையிருக்குப்பா. நீங்களே பார்த்துக்கங்க’ என்று ஒதுங்கிக் கொண்டார்.
‘ஒரு காலத்துல ஐதரபாத்ல இருக்கிற கிரிக்கெட் கிரவுண்டுக்கு கிரிக்கெட் பார்க்க போயிருக்கேன். அங்க கால் வைக்கும் போதே ஒரு பரவசம் வரும். அந்த பிட்சை நம்மளும் மிதிக்க மாட்டோமான்னு ஏக்கமா இருக்கும். இன்னைக்கு அதே கிரவுண்ட்ல நான் ஆடுறேங்கிறதுதான் பெரிய சந்தோஷம். எங்க டீம்ல ஆடுற எல்லாருமே ரொம்ப ஃபிட்டா இருக்கோம். ஏன்னா எங்களுக்கு ட்ரெய்னிங் கொடுக்கிற கோச் அப்படி பிழிஞ்சு எடுக்கிறாரு. இந்த மேட்ச்ல நாங்க ‘வின்’ பண்ணுவோம்ங்கிற நம்பிக்கை நிறையவே இருக்கு’ என்றவரை இடைமறித்து விஷால் விலகுனதுக்கு காரணமே உங்கள்ல இருக்கிற மூன்று நடிகர்கள்தான் காரணம்னு சொல்றாங்களே? என்றோம்.
‘அப்படியொன்னும் இல்ல. நேத்து கூட விஷால் போன் பண்ணி எப்படி நடக்குது. ஒழுங்கா ட்ரெயினிங் போறீங்களா?’ன்னு கேட்டுகிட்டிருந்தாரு. ‘இந்த ஆட்டத்துல அவர் கேப்டனா தலைமை ஏற்கலேன்னாலும், கண்டிப்பா விளையாட வர்றேன்னு சொல்லியிருக்கார் ’ என்றார்.
போன மேட்ச்ல த்ரிஷா பிராண்ட் அம்பாசிடரா இருந்தாங்க. இந்த மேட்சுக்கு யாரு? என்ற கேள்விக்கு அழாத குறையாக பதிலளித்தார் ஜீவா. ‘நிறைய பேருகிட்ட பேசிட்டோம். யாரும் வர மாட்டேங்குறாங்க!’
கண்ணு மேட்ச் மேல மட்டும் இருந்திருந்தா வருவாங்களோ என்னவோ?